சைனீஸ் பைனாப்பிள் ரைஸ்
தேவையான பொருட்கள்
பாஸ்மதிஅரிசி – 2 கப் (வேகவைத்துள்ள சாதம்)
பைனாப்பிள் – 10 (அரைவட்ட வடிவில் கட் செய்தது)
வெங்காயம் – ஒரு கப் (பொடி கட்டங்களாக நறுக்கியது)
குடைமிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கியது, எந்த கலர் என்றாலும் பரவாயில்லை)
கேரட் – ஒரு கப் (பொடியாக நறுக்கியது)
வெங்காயத்தாள் – ஒன்று (பொடியாக நறுக்கியது)
இஞ்சி – ஒரு டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
பூண்டு – ஒரு டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
பச்சைமிளகாய் – 2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
சோயசாஸ் – ஒரு டேபிள் ஸ்பூன்
அஜினமோட்டோ – 1/2 டீஸ்பூன்
கரம்மாசலாதூள் – ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
மேலே கூறியுள்ளதுப்போல் நறுக்க வேண்டியவற்றை நறுக்கிக்கொள்ளவும், தேவையானவற்றை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.
அடுத்தது வெங்காயம், கேரட் மற்றும் குடைமிளகாய் போட்டு வதக்கவும். பைனாப்பிள் போட்டு நன்றாக வதக்கவும். கரம் மசாலாத்தூள் போட்டும் வதக்கவும்.
கேரட் வெந்துவரும் வரை வதக்கிவிட்டு வேகவைத்துள்ள ரைஸை போட்டு கிண்டவும். அதில் சோயாசாஸ், அஜினமோட்டோவும், வெங்காயத்தாளும் போட்டு கிண்டிவிடவும் 3 நிமிடம் மிதமான தீயில் மூடிப்போட்டு வேகவைக்கவும்.
சைனீஸ் ஈஸி பைனாப்பிள் ரைஸ் தயார். சூடாக இருக்கும்போதே பரிமாறவும்.