
- காந்தி மருத்துவமனை மருத்துவர்கள் மீது தாக்குதல்
- கொரோனா நோயாளி மரணமடைந்ததால் ஆத்திரம்.
காந்தி மருத்துவமனையில் ஒரு ஜூனியர் மருத்துவர் மீது கொரோனா நோயாளியின் உறவினர்கள் தாக்குதல் நடத்தினார்கள். கொரோனா நோயாளி மரணம் அடைந்தார் என்ற செய்தியால் ஆத்திரமடைந்து இத்தகைய செயலுக்கு முன்வந்தார்கள்.
கொரோனா தொற்றுநோய்க்கு உயிரை பணையம் வைத்து போராடும் போர்வீரர்களான மருத்துவர்களுக்கு அவமதிப்புகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. செகந்திராபாதில் உள்ள காந்தி மருத்துவமனையில் இது போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்தது. ஒரு ஜூனியர் மருத்துவர் மீது நோயாளியின் உறவினர்கள் தாக்குதல் நடத்தினார்கள்.
கரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்த நோயாளி மரணித்ததால் அவருடைய உறவினர்கள் கொடூரமாக நடந்து கொண்டார்கள். பணியிலிருந்த ஜூனியர் மருத்துவர் மீது அங்கிருந்த இரும்பு நாற்காலியை எடுத்து வீசினர். இந்த தாக்குதலில் ஜூனியர் மருத்துவர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தார்கள்.
செவ்வாயன்று ஜூன் 9ஆம் தேதி இரவு ஏழு மணி நேரத்தில் இந்த சம்பவம் நேர்ந்தது. உயிரை பணையம் வைத்து நோயாளிகளுக்கு சேவை செய்து வரும் மருத்துவ சிப்பந்திகள் மீது தாக்குதல் நடப்பது கவலை அளிப்பதாக உள்ளது. மருத்துவர்கள் மீது தாக்குதல் செய்தவர்கள்மீது கடினமான நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டுமென்று டாக்டர்களும் நர்சுகளும் டிமாண்ட் செய்துள்ளார்கள்.
தங்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும் என்று அரசாங்கத்தை கோரியுள்ளார்கள். இதுபோன்ற சம்பவங்கள் மருத்துவர்களின் மன தைரியத்தை வீழ்த்துகிறது என்று வருத்தம் தெரிவித்து உள்ளார்கள்.
காந்தி மருத்துவமனையில் மருத்துவர் மீது இதற்கு முன்பு ஒரு முறை இதேபோல் தாக்குதல் நடந்தது. கொரோனா தொற்று பரவல் பின்னணியில் இது போன்ற செயல்கள் கவலை அளிப்பதாக மருத்துவர்கள் கூறி உள்ளார்கள்.
தெலங்காணா மாநிலத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் போது இதுவரை 153 மருத்துவ சிப்பந்திகள் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளார்கள்.

ஜூனியர் மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தை காந்தி மருத்துவமனை மருத்துவர்களும் மெடிகோக்களும் தீவிரமாகக் கண்டித்து உள்ளார்கள். செவ்வாய் அன்று இரவு அடையாளப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்களை இனிமேலாவது கட்டுப்படுத்த வேண்டும் என்று அரசாங்கத்திற்கு டிமாண்ட் செய்தார்கள் .தமக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள்.
மறுபுறம் தெலங்காணாவில் கரோனா மரணங்களின் எண்ணிக்கை பெருகி வருவது கவலை அளிக்கிறது. கரோனாவால் செவ்வாயன்று மேலும் 6 பேர் மரணம் அடைந்தார்கள். இதனால் மாநிலத்தில் கரோனா மரணங்களின் எண்ணிக்கை 148க்கு உயர்ந்தது. ஞாயிறு ஒரே நாளில் கொரோனாவால் 14 பேர் மரணம் அடைந்தது கவனிக்கத்தக்கது. மாநிலத்தில் இதுவரை ஒரு நாளில் இத்தனை அதிகமாக மரணங்கள் நேர்ந்தது இதுவே முதல்முறை. மாநிலத்தில் மொத்தம் பாசிட்டிவ் கேசுகளின் எண்ணிக்கை 3472 ஐ அடைந்துள்ளது.