
- வாரங்கலில் இருந்து அமெரிக்காவுக்கு அனுமான் சிலை.
வைபவமாக விக்ரக பிரதிஷ்டை. - அமெரிக்காவில் வைபவமாக ஆஞ்சநேய ஸ்வாமி விக்ரஹம் பிரதிஷ்டை நடந்தேறியது.
டெலவேர் மாநிலத்திலுள்ள ஹாகென்சின் டவுனில் திங்களன்று 25 அடி ஹனுமான் விக்ரஹத்தை சாஸ்திர விதிமுறைகள் படி பூஜைகள் செய்து பிரதிஷ்டை செய்தார்கள். வேத பண்டிதர்கள் யந்திர, பிராண பிரதிஷ்டைகள் செய்தார்கள். ஆனால் கரோனா வைரஸ் பரவல் காரணமாக மிகச்சில பக்தர்களோடு விக்கிரகம் பிரதிஷ்டை நிகழ்ந்தது என்று டெலவேர் ஹிந்து டெம்பிள்ஸ் அசோசியேஷன் தெரிவித்தது.
இந்த ஹனுமான் சிலையை தெலங்காணாவில் உள்ள வாரங்கலில் இருந்து அமெரிக்காவுக்கு எடுத்து வந்ததாக கூறினார்கள்.

இந்த அனுமான் சிலையை செதுக்குவதற்கு ஓராண்டிற்கு மேல் பிடித்தது. வாரங்கலில் பல சிற்பிகள் சேர்ந்து கிரானைட் கல்லில் இருந்து 25 அடி விக்கிரகத்தை செதுக்கினார்கள்.
வாரங்கலில் இருந்து நியூயார்க் வரை கப்பல் மூலம் எடுத்துச் சென்று அங்கிருந்து டிரக் மூலம் எடுத்துச் சென்றார்கள். 45 டன் எடை கொண்ட இந்த விக்ரகத்தை தயார் செய்து போக்குவரத்தில் எடுத்துச் செல்வதற்கு 75 லட்சம் ரூபாய்க்கு மேல் என்பது செலவாகியது என்று தெரிகிறது .