புது தில்லி: கைவினை மற்றும் கம்பளத் துறை திறன் மையம் என்ற புதிய நிறுவனத்தை மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் (தனிபொறுப்பு), நாடாளுமன்ற விவகார துறையின் இணை அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி நாளை துவக்கி வைப்பார். 20வது கைவினை ஏற்றுமதி விருது வழங்கும் விழாவின் போது இந்த புதிய நிறுவனம் துவக்கி வைக்கப்படும். சமூதாயத்தின் அடித்தளத்தில் உள்ள கலைஞர்கள், கைவினை பொருட்கள் மற்றும் கம்பள பொருட்களின் ஊழியர்கள் ஆகியோரின் திறன் மேம்பாட்டை இந்நிறுவனம் ஊக்குவிக்கும். அவர்கள் மேம்பட்ட குறைகளை கையாளவும், உற்பத்தியை பெருக்கவும் இது உதவும். தொழில்சார் தரத்தை உயர்த்தவும், ஊழியர்கள் சந்தையில் உள்கட்டமைப்பை அமைப்பதும், சான்றிதழ் மற்றும் ஆய்வு முறையை அறிமுகப்படுத்துவதும், கலைஞர்களுக்கு கைவினை லைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டிற்கு அனைத்து விதமான வழிகாட்டுதல் அளிப்பது ஆகியவற்றிக்கு இந்த மையம் பொறுப்பாகும். இநத் மையம் புதுதில்லியில் இருந்து செயல்படும். பிரதமர் நரேந்திர மோடி திறன் மேம்பாட்டிற்கு கொடுத்துள்ள முக்கியத்துவத்தை வைத்து இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் ஒரே மாதிரியான, சிறந்த தரம் வாய்ந்த பொருட்களை உற்பத்தி செய்வதற்கான திறன் மேம்பாட்டின் முக்கியதுவத்தை பிரதமர் எடுத்துரைத்துள்ளார். ஏற்கனவே, செப்டம்பர் 28, 2014ல் பிரதமர் தனது டுவிட்டர் வலைதளத்தில் தெரிவித்ததாவது: திறன் மேம்பாட்டிற்கு நாங்கள் முக்கியதுவம் கொடுத்துள்ளோம். திறன் மேம்பாட்டிற்காக நாங்கள் தனி அமைச்சகம் அமைத்துள்ளோம். ஏற்கனவே ஆகஸ்ட் 31, டுவிட்டர் வலையதளத்தில் பிரதமர் தெரிவித்ததாவது:- இந்தியா இளைஞர்களின் தேசம் திறன் மேம்பாட்டிற்கு நாங்கள் முக்கியதுவம் கொடுப்போம். தரம், குறையோ அல்லா பொருள், ஒழுக்கம் என அனைத்துக்கும் நாங்கள் முக்கியதுவம் அளிப்போம்: பிரதமர் இதன் அடிப்படையில் இந்த மையம் நாளை ஆரம்பிக்கப்படுகிறது. மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் (தனி பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகார துறையின் இணை அமைச்சர் இம்மையத்தை துவக்கி வைப்பார். மத்திய ஜவுளி துறையின் இணை அமைச்சர் (தனி பொறுப்பு) திரு. சந்தோஷ் குமார் கங்வார், மத்திய ஜவுளி துறையின் செயலர் திரு. எஸ்.கே. பாண்டா, கைவினை பொருட்கள் துறையின் வளர்ச்சி / மேம்பாட்டு ஆணையர் திரு. எஸ்.கே. பிஸ்வாஸ், தொழிற்துறையின் நிபுணர்கள், கைவினை பொருட்கள் ஏற்றுமதியாளர்கள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர். புது தில்லியில், நாளை மாலை 6.30 மணிக்கு இந்த மையம் துவங்கப்படும்.
கைவினை கம்பளத் துறை திறன் மையம்: தில்லியில் நாளை துவக்கம்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari
Hot this week