
அயோத்தியில் ராமர் கோயில் குறித்த விமர்சனங்களை முன் வைத்து, எம்ஐஎம் கட்சித் தலைவர் அசதுத்தீன் ஓவைஸி இக்கட்டில் சிக்கிக் கொண்டுள்ளார். அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப் பட்டுள்ளது.
ஆன்ட்டி டெரரிஸ்ட் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா பிரசிடெண்ட் வீரேஷ் சாண்டில்யா இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பான பூமி பூஜை நிகழ்ச்சி குறித்து ஓவைஸி அண்மையில் சர்ச்சைக்குரிய விமர்சனங்களை முன்வைத்தார். முக்கியமாக பிரதமர் மோடி அதில் கலந்து கொள்வது குறித்து ஒவைஸி செய்த விமர்சனங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
அயோத்தி வரலாற்றிலிருந்து பாபர் மசூதி சம்பவத்தை எப்போதுமே துடைத்து எறிய முடியாது என்றார். அயோத்தியில் பாப்ரி மஸ்ஜித் இருந்தது என்றும் இருக்கிறது என்றும் நிச்சயமாக இருக்கும் என்றார். வரலாற்றை யாரும் மாற்ற முடியாது என்றும் கூறினார். அரசியல் சட்டத்திற்கு விரோதமாக பிரதமர் மோடி நடந்துகொள்கிறார் என்று விமர்சனம் செய்தார்.
ஒரு பிரிவினரின் கோவில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டுவது அரசாங்க சட்டத்திற்கு விரோதமானது என்று இதற்கு முன் விமர்சனம் செய்தார். அதன்பின் இந்த ஜூலை மாதம் 30ம் தேதி ஒரு டிவி சேனலில் விவாதத்தில் பங்கு கொண்ட அசதுத்தீன் உச்ச நீதிமன்றத்தின் புனிதத்தையும் அதன் பாரபட்சமற்ற நடத்தையையும் குறித்து குறைகூறி, தாம் தவறு கண்டறிந்ததாகக்கூறி விமர்சனம் செய்தார். இந்த விமர்சனங்களின் மீது இப்போது மனுதாரர் தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது. இது விரைவில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.
எம்ஐஎம் கட்சித் தலைவர் ஹைதராபாத் எம்பி அசதுத்தீன் ஒவைசி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது.
ஆன்ட்டி டெரரிஸ்ட் ஃப்ரென்ட் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர் வீரேஷ் இந்த மனுவைத் தாக்கல் செய்தார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பான பூமி பூஜை நிகழ்ச்சி மீது ஒவைசி பல சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தது அப்போதே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிரதமர் மோடி இந்த நிகழ்வில் பங்கு கொண்டது குறித்து பல்வேறு விமர்சனங்கள் செய்துள்ளார். உச்ச நீதிமன்றத்தை குறிவைத்து இவ செய்துள்ள விமர்சனங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. நாட்டில் அமைதி யின்மையை ஏற்படுத்தி, மக்களிடம் கலவரத்தையும் வன்முறையும் தூண்டும் இவர்கள் போன்றவர்கள், தேர்தலில் நின்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகி விடுவது, இந்திய ஜனநாயகத்தின் சாபக்கேடு என்று பலர் கருத்து தெரிவித்தனர்.
இது போல் தமிழகத்திலும் காவல்துறை அதிகாரிகளைக் கையில் போட்டுக் கொண்டு, இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் சில அரசியல் கட்சிகள் என்ற போர்வையில், மக்களிடம் வன்முறையையும் கலவரத்தையும் தூண்டி விட்டு வருகின்றன. இதற்கு உதாரணமான காட்சிகள் பல, அயோத்தி ராம ஜன்ம பூமியில் பூமி பூஜை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது தமிழகத்தில் பரவலாக நிகழ்ந்தது. இதில் போலீஸார் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள் ! . உதாரணத்துக்கு ஒரு காட்சி…