spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த ‘நடுத்தர மக்கள்’ பட்ஜெட்: சிறப்பம்சங்கள்!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த ‘நடுத்தர மக்கள்’ பட்ஜெட்: சிறப்பம்சங்கள்!

- Advertisement -

மத்திய பட்ஜெட் உரை: 2023-24ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் உரை ஆற்றினார். அப்போது அவர்,  “நாட்டின் அடுத்த 100 ஆண்டுகளுக்கான புளூ பிரிண்ட்டாக இந்த பட்ஜெட் இருக்கும்” என்று குறிப்பிட்டார்.

2023-24 மத்திய பட்ஜெட் முக்கிய அம்சங்கள்: 

இந்திய பொருளாதாரம் சரியான பாதையில் செல்கிறது, ஒளிமையமான எதிர்காலத்தை நோக்கி பயணிக்கிறது 

கோவிட் பெருந்தொற்றின் போது, ஒருவரும் பட்டினியுடன் தூங்கச் செல்லக்கூடாது என்பதற்காக, 28 மாதங்கள் சுமார் 80 கோடி பேருக்கு உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டன

உணவு, தானியங்கள் வழங்கல் திட்டத்திற்கு ₹2 லட்சம் கோடி ஒதுக்கீடு

9 ஆண்டுகளில் இந்தியாவில் பொருளாதாரம் உலக அளவில் 10ம் இடத்தில் இருந்து 5ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. நாட்டின் வளர்ச்சி 7%-ஆக உள்ளது. 

உலகளாவிய சவால்கள் இருக்கும் இந்நேரத்தில், G20 தலைமையை இந்தியா ஏற்றது, உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கை வலுப்படுத்த ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது.

2014 முதல் அரசின் முயற்சிகள் அனைத்து குடிமக்களுக்கும், சிறந்த வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்துள்ளது

தனிநபர் வருமானம் 2 மடங்காக அதிகரித்து ₹1.97 லட்சமாக உயர்ந்துள்ளது

102 கோடி பேருக்கு 220 கோடி கொரோனா டோஸ் தடுப்பூசி போட்டுள்ளோம்.

9 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் 5-வது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7% ஆக இருக்கும் என கணிப்பு.

11.4 கோடி விவசாயிகளுக்கு வங்கிகள் மூலம் நேரடியாக உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது.

2023-ம் ஆண்டு மேலும் ஓராண்டுக்கு இலவசமாக உணவு தானியம் வழங்கப்படும்

சிறுதானியங்கள் உற்பத்தியில் இந்தியா உலகில் முதலிடம் வகிக்கிறது.

“9.6 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது

ஜம்மு & காஷ்மீர், லடாக் வளர்ச்சிக்கு பல்வேறு புதிய திட்டங்கள் அறிமுகம்”

மத்திய பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்

47.8 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

பிரதமரின் காப்பீட்டு திட்டத்தின்கீழ் 44.6 கோடி பேருக்கு காப்பீடு வழங்கப்பட்டுள்ளது

கிராமப்புறங்களில் வேளாண் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்க ஊக்குவிப்பு

மீன்வளத்துறையை மேம்படுத்த ரூ6,000 கோடி

உஜ்வாலா திட்டத்தின்கீழ் 9.16 கோடி இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன

கால்நடை வளர்ப்பு, மீன் வளத்துறைக்கு ரூ20 லட்சம் கோடி ஒதுக்கீடு

தோட்டக்கலை துறைக்கு ₹2,200 கோடி நிதி ஒதுக்கீடு

தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் 1 லட்சம் சுய உதவிக்குழுக்களில் பெண்களை இணைத்து பெரும் வெற்றி கண்டுள்ளோம்

“விவசாயத்துறையில் புதிய ஸ்டார்ட் அப்கள் உருவாக்க ஊக்குவிக்கப்படும்

வரும் நிதியாண்டில் 20 லட்சம் கோடி ரூபாய் விவசாய கடன் வழங்க இலக்கு

குழந்தைகள், இளைஞர்களுக்காக அனைத்து கிராமங்களிலும் நூலகங்கள் அமைக்கப்படும்

157 புதிய நர்சிங் கல்லூரிகள் உருவாக்கப்படும்

பசுமை எரிசக்தி உற்பத்திக்கு தொடர்ந்து முன்னுரிமை

ஐசிஎம்ஆர் நிலையங்களை தனியாரும் பயன்படுத்தலாம்

740 ஏகலைவா பள்ளிகளுக்கு 38,000 ஆசிரியர்கள் நியமனம்

பிரதமர் வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ70,000 கோடி ஒதுக்கீடு

7 முக்கிய அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் உள்ளன 

1. ஒருங்கிணைந்த வளர்ச்சி

2.  அனைவரையும் சென்றடைதல்

3. உள்கட்டமைப்பு முதலீடு

4. திறன் வெளிக்கொணர்தல்

5. பசுமை புரட்சி

6. இளைஞர் சக்தி

7. நிதித்துறை

9.6 கோடி சமையல் எரிவாயு கியாஸ் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன, 102 கோடி பேருக்கு 220 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன, 47.8 கோடி ஜன்தன் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன

பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு

ரயில்வே துறைக்கான நிதி ஒதுக்கீடு – ₹2,04,000 கோடி

மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன் வழங்க ரூ1.3 லட்சம் கோடி ஒதுக்கீடு

பழங்குடியினருக்கான ஏகலைவா பள்ளிகளில் 38,800 ஆசிரியர்கள் அடுத்த 3 ஆண்டுகளில் நியமிக்கப்படுவார்கள்

பிராந்தியங்களை இணைக்க 50 புதிய விமான நிலையங்கள்

கர்நாடகாவில் வறட்சி பாதித்த பகுதிகளில் ரூ5,300 கோடி ஒதுக்கீடு

கர்நாடகாவில் வறட்சி பாதிப்பு நிவாரணமாக ₹5,300 கோடி வழங்கப்படும்

ரயில்வே துறைக்கான நிதி ஒதுக்கீடு – ₹2,40,000 கோடி

50 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் வகையிலான மாநிலங்களுக்கான வட்டியில்லா கடன் வழங்கப்படுவது மேலும் ஓராண்டு தொடரும்

“157 புதிய நர்சிங் கல்லூரிகள் நாடு முழுவதிலும் உள்ள முக்கிய மருத்துவ கல்லூரிகளில் அமைக்கப்படும்”

“நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்கள் குறித்த தரவு தளம் உருவாக்கப்படும்

கர்நாடகாவில் வறட்சி பாதித்த பகுதிகளுக்கு சிறிய நீர்பாசனங்களை ஊக்கப்படுத்தும் வகையில் பத்ரா மேலணை திட்டத்திற்கு ரூ5,300 கோடி ஒதுக்கீடு

பிரதமரின் வீட்டுவசதி திட்டத்திற்கு ₹79,000 கோடி ஒதுக்கீடு!

கட்டமைப்பு திட்டங்களுக்கு ₹10 லட்சம் கோடி ஒதுக்கீடு!

பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதிகள்

போக்குவரத்து துறைக்கு ₹78,000 கோடி ஒதுக்கீடு

மீன்வளத்துறைக்கு ₹6,000 கோடி ஒதுக்கீடு

பிரதரின் அவாஸ் யோஜனா திட்டத்திற்கு ₹79,000 கோடி ஒதுக்கீடு

பழங்குடியின மேம்பாட்டுக்கு ₹15,000 கோடி ஒதுக்கீடு

கர்நாடகாவுக்கு சிறப்பு நிதி ₹5,300 கோடி.

மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன் வழங்க ₹1.3 லட்சம் கோடி

மனித கழிவுகளை மனிதனே அகற்றுவதை ஒழிக்க புதிய இயந்திரங்கள் வாங்கப்படும்

“ரூ. 15,000 கோடி அடுத்த 3 ஆண்டுகளில் இலக்கு நிர்ணயித்து பழங்குடியினருக்கு திறன் மேம்படுத்தும் பயிற்சி வழங்கப்படும்”

இ-கோர்ட் திட்டத்தின் 3வது கட்டத்திற்கு ₹7000 கோடி ஒதுக்கீடு

கூடுதலாக 50 விமான நிலையங்கள், ஹெலிகாப்டர் தளங்கள் அமைக்கப்படும்

மீன்வளத்துறைக்கு 6000 கோடி

விவசாயத்துறை போலவே மீனவர்கள் பயன்பெற கூட்டுறவு மாடல் மீன்வளத்துறை திட்டங்களுக்கு 6000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என பட்ஜெட் உரையில் தெரிவித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

இதன்மூலம் மீன்வளத்துறைக்கு பல புதிய திட்டங்கள் கொண்டுவரப்படும் என்றார்.

பட்ஜெட்டில் அடிப்படை கட்டமைப்பு துறைக்கு மட்டும் 33% நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

அதன்படி, அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த ₹10 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகர்ப்புற கட்டமைப்புக்கு ₹10,000 கோடி, பிரதமரின் வீட்டு வசதி திட்டத்திற்கு ₹78,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ரயில்வே துறைக்கு ₹2,04,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

3 கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு திறனாய்வு மையங்கள் அமைக்கப்படும்

மின்னணு நீதிமன்றங்கள் அமைக்க ரூ7,000 கோடி நிதி ஒதுக்கீடு

“கடந்த 2013-14ம் ஆண்டை ஒப்பிடும்போது ரயில்வே துறைக்கு 9 மடங்கு அதிகமாக நிதி – ரூ. 2.4 லட்சம் கோடி ஒதுக்கீடு”

பிரதமரின் கவுசல் யோஜனா திட்டத்தின் கீழ் அடுத்த 3 ஆண்டுகளில் லட்சக்கணக்கான இளைஞர்கள் திறன்படுத்தப்படுவர்

பல்வேறு மாநிலங்களில் 30 சர்வதேச திறன் இந்தியா மையங்கள் அமைக்கப்படும்

ஆய்வகங்களில் தயாரிக்கப்பட்ட வைரங்களுக்காக, சுங்கவரி குறைக்கப்படும்

“இளைஞர்களின் திறனை வளர்க்க நாடு முழுவதும் 30 சர்வதேச தரத்தில் திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும்”

5ஜி சேவைகளுக்கான செயலிகளை உருவாக்க 100 ஆய்வகங்கள், பொறியியல் கல்வி நிறுவனங்களில் உருவாக்கப்படும்

மாசு ஏற்படுத்தும் பழைய வாகனங்களை புழக்கத்தில் இருந்து ஒழிக்க கூடுதல் நிதி

நகர்ப்புற வளர்ச்சி திட்டங்களுக்கு ₹10,000 கோடி ஒதுக்கீடு

போக்குவரத்து துறைக்கு ₹75,000 கோடி ஒதுக்கீடு

நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில் 3 செயற்கை நுண்ணறிவு (AI) சென்டர்கள் நிறுவப்படும்

குறிப்பிட்ட அரசு நிறுவனங்களின் அனைத்து டிஜிட்டல் பணிகளுக்கும், பொதுவான அடையாள அட்டையாக PAN கார்டு பயன்படுத்தப்படும்

வங்கி செயல்முறையை மேலும் சிறப்பாக்க வங்கி முறைப்படுத்தும் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர நடவடிக்கை

கூடுதலாக 50 விமான நிலையங்கள், ஹெலிகாப்டர் தளங்கள் அமைக்கப்படும் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தனிநபர் வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு ₹7 லட்சமாக உயர்வு.

வருமான வரி உச்சவரம்பு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக அதிகரிப்பு

ஆண்டிற்கு ஏழு லட்சம் வரை தனிநபர் வருமானம் பெறுவருக்கு இனி வருமான வரி இல்லை.

தனிநபர் வருமானம் 2 மடங்காக அதிகரித்து ₹1.97 லட்சமாக உயர்ந்துள்ளது.

*தங்கம், வெள்ளி மற்றும் வைரம் மீதான சுங்கவரி உயர்த்தப்பட்டது; தங்கம், வெள்ளி மற்றும் வைரம் விலை உயர்கிறது.*

சிகரெட்களுக்கான வரி மற்றும் புகையிலை பொருட்களும் விலை உயர்கிறது. 16 சதவீதம் வரை வரி உயர்வு செய்யப்படுகிறது: நிதியமைச்சர் அறிவிப்பு

செல்போன், டிவி விலை குறைகிறது

சைக்கிள், பொம்மைகளுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

எலக்ட்ரிக் வாகன பேட்டரிக்கு பயன்படுத்தப்படும் லித்தியம் – அயன் மூலப் பொருட்களுக்கு வரி கிடையாது.

சில மொபைல் உதிரி பாகங்களுக்கு இறக்குமதி செய்வதற்கான சுங்க வரி குறைக்கப்படும்.

டிவி பேனல்களுக்கான சுங்க வரி 2.5%ஆக குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டிவி, செல்போன், சைக்கிள் விலை குறையும்.

இனி பான் கார்டு பொது அடையாள அட்டை!

பான் கார்டை பொது அடையாள அட்டையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை அறிவித்தார்.

நாடாளுமன்றத்தில் 2023-24ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். அவர் பேசுகையில், பான் கார்டு இனி பொது அடையாள அட்டையாக அறிவிக்கப்படுகிறது. ஆதார், பான், டிஜிலாக்கர் முறைகள், தனிநபர் பயன்பாட்டுக்காக பிரபலப்படுத்தப்படும் எனத் தெரிவித்தார். மேலும், வங்கிகளின் கேஒய்சி நடைமுறை எளிதாக்கப்படும் என அறிவித்துள்ளார்.

இதன்மூலம், நாடு முழுவதும் இனி பான் கார்டை அடையாள அட்டையாக பயன்படுத்த முடியும். அரசின் நிதி தொடர்பான அனைத்து செயல்பாடுகளுக்கும் பான் கார்டு பொது அடையாள அட்டையாக பயன்படுத்தப்படும்

தேக்னா அப்னா தேஸ் (உங்கள் நாட்டை பாருங்கள்) என்ற புதிய திட்டம் சுற்றுலாத்துறைக்காக கொண்டு வரப்படுகிறது.

நாடு முழுவதும் 50 முக்கிய இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சுற்றுலாத்துறை என்பது மேம்படுத்தப்படும்.

ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு’ (One District One Product) என்ற திட்டம் மூலம் பொருட்கள் மற்றும் புவியியல் குறியீட்டு பொருட்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்தவும், விற்பனை செய்யவும் மாநில அரசுகள் ஊக்குவிக்கப்படும்.

உள்நாட்டில் செல்போன் தயாரிப்புகளை ஊக்குவிக்கும் விதமாக, செல்போன் உதிரி பாகங்கள் இறக்குமதிக்கான சுங்கவரி குறைப்பு; 23 சதவீதத்திலிருந்து 13% வரை வரி குறைப்பு செய்யப்படுகிறது.

ரோபோடிக் ட்ரோன் கேமிராக்கள் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இளைஞர்களுக்கான திறன் மேம்பாடு வழங்கப்படும். தற்போது உள்ள திறன் மேம்பாடு பயிற்சியில் இந்த புதிய அமைப்புகளும் சேர்க்கப்படும்

சுற்றுலாத்துறைக்கு தனி செயலி

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க தனி செயலி உருவாக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாநிலங்களிலும் சுற்றுலாவை ஊக்குவிக்க சிறப்பு வணிக வளாகம் அமைக்கப்படும்.

அனைத்து பொருட்களும் கிடைக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் சிறப்பு வணிக வளாகம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி விதிப்பு முறையில் மாற்றம் 

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கான உச்சபட்ச வரம்பு ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாக உயர்வு

₹3 லட்சம் வரை – வரி இல்லை

₹3 முதல் ₹6 லட்சம் வரை – 5% வரி

₹6 முதல் ₹9 லட்சம் வரை – 10% வரி

₹9 முதல் ₹12 லட்சம் வரை – 15% வரி

₹12 முதல் ₹15 லட்சம் வரை – 20% வரி

₹15 லட்சத்துக்கு மேல் – 30% வரி

இதனால் வருமான வரி குறைய வாய்ப்பு உண்டு.

பட்ஜெட் உரைக்கு எடுத்துக் கொண்ட குறைந்த பட்ச நேரம்

மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 87 நிமிடங்கள் உரையாற்றினார். இது தான் அவர் எடுத்து கொண்ட குறைந்தபட்ச நேரம்.

2023 – 24ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து பார்லிமென்டில் உரையாற்றினார். ‘அமிர்த கால கட்டத்தில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இது’ எனக்கூறி உரையை துவக்கிய நிர்மலா சீதாராமன், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பது தான் நரேந்திர மோடி அரசின் முதல் கொள்கை எனக்கூறிய அவர், சரியாக 87 நிமிடங்கள் உரையாற்றினார்.

தொடர்ச்சியாக 5 பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள நிர்மலா சீதாராமன் 2021 ல் 92 நிமிடங்கள் உரையாற்றினார். அதேநேரத்தில் 2020 ல் 2 மணி நேரம் 40 நிமிடங்கள் நிர்மலா பேசினார். இது தான் இந்திய பட்ஜெட் உரையில் நீண்ட நேர உரை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe