
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கன மழை காரணமாக குற்றாலம் மெயினருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துக் காணப் படுகிறது. இதை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப் பட்டிருக்கிறது.
நெல்லை மாவட்டம் திருக்குற்றாலத்தில் அருவிக்கு நீர் வரத்து இருக்கக்கூடிய நீர்பிடிப்புப் பகுதியில் கன மழை பெய்து வருகிறது. மேலும், தென்காசி, செங்கோட்டை, குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் திடீர் திடீரென கன மழை பெய்ததால், அருவிகளில் நீர்ப்பெருக்கு அதிகரித்தது.
இந்நிலையில், திருக்குற்றாலம் மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டி நீர் விழுந்ததால், போலீசார் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்தனர். இதனால், ஐயப்ப பக்தர்கள் பெரும் ஏமாற்றத்துக்கு ஆளாயினர்.