Home அடடே... அப்படியா? என்ன சொல்லணும் தெரியுமா? காக்கா புடி வெச்சேன் கன்னுப்புடி வெச்சேன்…

என்ன சொல்லணும் தெரியுமா? காக்கா புடி வெச்சேன் கன்னுப்புடி வெச்சேன்…

kanupongal1

நமது சகோதரிகள் அனைவருக்கும் கனு பொங்கல் நமஸ்காரம் வாழ்த்துக்கள் (16.01.20 வியாழன் காலை 5.00 முதல் 6.00 மணிக்குள்)

இன்று (15.01.20) இரவு சாப்பாடு ஆனா உடனே, வீட்டில் உள்ள பெரியவர் பொங்கப்பானையில கட்டி இருக்கும் மஞ்சள கொத்த கழட்டி, அதில் இருக்கிற மஞ்சள தனியா எடுத்து, முதல்ல அம்மாவுக்கு அப்புறம் சிறியவர்களுக்கு முன்நெத்தியில, கன்னத்தில், *பூவோட பொட்டோட, சீரோட செனத்தியோட, பேரோட புகழோட, அழகோடு ஆயுஸோட, சின்ன ஆம்படையானுக்கு வாக்கப்பட்டு பெரிய ஆம்படையானுக்கு புள்ள பெத்து நன்னா இருக்கணும்” அப்படின்னு மஞ்ச கீத்தி விடுவேண்டும்.

பின்னர் பாட்டி அம்மா அப்பறம் அத்தை பெரியம்மானு, இப்படி சொந்தக்காரா, அப்புறம் தெருல பக்கத்தாத்துல இருக்கற மாமிகள் எல்லார்கிட்டயும் போய் மஞ்சள் கீத்திண்டு நமஸ்காரம் பண்ணிட்டு வர்றது வழக்கம்

நாளை 16.01.20 வியாழன் காலை கனுப்பொங்கல். விடி காலம்பர ஐந்து மணிக்கு முன் எழுந்து (காலை 5.00 முதல் 6.00 க்குள்) பல்தேய்த்து, ஸ்வாமி நமஸ்காரம் பண்ணிட்டு,
முதல் நாள் மிஞ்சின சாதத்தை, மஞ்சள் பொடி போட்டு மஞ்சள் சாதம், சிவப்பு சாதம், சர்க்கரை பொங்கல், தயிர்சாதம், மஞ்ச இலை, கரும்புத் துண்டு, சுண்ட குழம்பு, வேப்பலகட்டி, வெத்தல பாக்கு, பழம், பூ, கோலப்பொடி எல்லாம் ready தண்ணி வைத்துகொண்டு அருகில் உள்ள குளம் , நீர் நிலை அல்லது விட்டில் உள்ள கினற்றுக்கு அருகில் தண்ணி தெளிச்சு, ஒவ்வொருத்தருக்கும் ஒரு கோலம் போட்டுட்டு, அதுல மஞ்ச இலையை 3,4 ன்னு, தனித்தனியா பரப்பி வைத்து, அதன் மேலே அம்மா ஒவ்வொரு சாதமா எடுத்து, கை கையா தர, அதை துளித்துளியாய், உருட்டாம, கிள்ளினாப்போல, அழகா, வரிசையாக வைக்கவேணும்.

அப்படி, ஒவ்வொரு சாதமாக, ஒவ்வொரு வரிசையாக, வைக்கும்போது
காக்கா புடி வச்சேன் கன்னுப்புடி வச்சேன் காக்காய் கூட்டம் போல நாங்கள்லாம்இருக்கணும். காக்கா கூட்டம் கலைஞ்சாலும் எங்க கூட்டம் கலைய கூடாது

அப்படின்னு சொல்லிண்டே வைக்கவும்.

குடும்பம் ஒற்றுமையாக, முக்கியமா கூடப்பிறந்த அண்ணன் தம்பிகளோட ஒற்றுமையா இருக்கணுங்கறத்துக்காக வேண்டிட்டு கொண்டாடுவது இது.

ஒவ்வொரு வருஷமும் அப்பா, அம்மா, அண்ணா தம்பிகள், .. அக்கா தங்கைகளுக்கு பொறந்தாத்து சீர்னு, கார்த்திகை சீர், பொங்கல் சீர் விடாம செய்யறது வழக்கமாச்சே. அதை கொண்டாட வேண்டாமா….

இத்தனையும் சூரிய உதயத்துக்கு முன்னாடியே செய்து விடுவது வழக்கம்.

இது முடிஞ்சு, நமஸ்காரம் பண்ணிட்டு, அப்புறமா தான், குளிக்க வேண்டும் தலைக்கு குளிக்கவும் இதற்க்கு “கணு பீடை” அப்படின்னு வேற சொல்லுவா.

கனுப்பிடி வைத்துவிட்டு மிச்சம் தயிர்சாதம் இருக்கும் இல்லையா…
அதோடு இன்னிக்கி, மத்தியானம் சாப்பிட, சர்க்கரைப் பொங்கல், வடை, புளியஞ்சாதம், எலுமிச்சம்பழ சாதம், தேங்காய் சாதம், மோர் குழம்பு, தயிர் சாதம், அப்பளம், கருடாம்னு, எல்லாம் பண்ணி சுண்ட குழம்பும், வேப்பிலை கட்டியுடன் ஒரு கட்டு கட்டவேண்டியது தான்

கூட்டமாக போய் நீர் நிலையில் கொண்டாடுங்கள் அதுதான் நமது சந்தோஷங்கள்.

சென்னைல வந்து மொட்டை மாடியிலதான் கனுப்புடி வைக்கிறதுனு பழக்கமா போச்சு…
சிலபேர் கனுப்புடி வைக்க “காக்கைக்கும் குருவிக்கும் கல்யாணம்” அப்படினு சொல்லறா.

அது மாதிரி எப்போ சொல்வோம்னா… வெயிலும் மழையும் சேர்ந்து அடிச்சா தான் சொல்லுவா…

கனுப்புடி வைக்கும் போது
“காக்கா புடி வச்சேன்,
கன்னுப்புடி வச்சேன்,
காக்காய் கூட்டம் போல
நாங்கள்லாம் இருக்கணும்
காக்கா கூட்டம் கலைஞ்சாலும்,
எங்க கூட்டம் கலைய கூடாது”னு சொல்லனும்…

ஒருமுறை, மொட்டை மாடியில் ,கலர் கலரா வைத்திருக்கிறது பார்த்துட்டு, பக்கத்துல இருந்த ஆந்திராக்கார பொண்ணு, என்னமோ ஏதோன்னு பயந்து,… சந்தேகமா…. என்னமோ இருக்கே என்னது அதுன்னு கேட்டுண்டு வந்தா..

வேறே எங்கேயும் இந்த கனுப்புடி வைக்கற வழக்கம் கிடையாது போல… இல்லையா….

அனைத்து சகோதரிகளுக்கும் கனு பொங்கல் நமஸ்காரங்கள் வாழ்த்துக்கள்

  • வேதிக் ரவி

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Translate »