ஆர்எஸ்எஸ்., குறித்த அவதூறு! பாடப் புத்தகங்களில் இடம் பெறக் காரணம் யார்?!

Published:

kovilpatti rss routemarch2 - 2026

”தமிழக பாடப் புத்தகமான 10ஆம் வகுப்பு சமூக அறிவியல் படத்தில் 2ம் பாகம் பக்கம் 50ல் சுதந்திரத்திற்கு முன்பு ஆர்.எஸ்.எஸ் முசுலிம்களுக்கு எதிரான நிலைப்பாட்டினை எடுத்தது எனக் குறிப்பிட்டிருந்ததை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் சார்பாக அதன் சென்னை செயலாளர் பி.சந்திரசேகரன் அவர்கள் தமிழக பள்ளி கல்வித்துறை செயலாளர் மற்றும் அதன் இயக்குனர் மீதும் தொடர்ந்த வழக்கில். மாணவர்களிடையே விநியோகம் செய்யப்பட்ட புத்தகங்களில் ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கவும். இனிவரும் காலங்களில் இதுபோன்ற தவறான தகவல்களை அச்சடிக்காமல் பார்த்துக்கொள்ளவும் பள்ளி கல்வித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

பாடப் புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ்., இயக்கம் குறித்த அவதூறான கருத்தை நீக்கக் கோரிய வழக்கில் பள்ளிக் கல்வித் துறை ஒரு உறுதிமொழியைக் கொடுத்தது. இனி வரும் காலங்களில், இதுபோன்ற வார்த்தைகள் இடம்பெறாது என்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்டது.

ஆர்எஸ்எஸ்., அமைப்பின் மாநில செயலர் பி.சந்திரசேகரன் தாக்கல் செய்த மனுவில், சமூக, பொருளாதார, அரசியல் வளர்ச்சிக்கு, ஆர்.எஸ்.எஸ்., இயக்கம் பாடுபடுகிறது. 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சமூக அறிவியல் பாடத்தில், ‘சுதந்திரப் போராட்டத்தின் போது ஹிந்து மகாசபாவும், ஆர்.எஸ்.எஸ்., இயக்கமும் முஸ்லிம்களுக்கு எதிரான நிலையை எடுத்தன’ என கூறப்பட்டுள்ளது. இந்தக் கருத்து பொய்யானது; அடிப்படையற்றது.

ALSO READ:  பழனி கோயில் நில விவகாரத்தில் கைதானவர் மரணம்; சந்தேகம் எழுவதாக இந்து முன்னணி குற்றச்சாட்டு!
schoolbook - 2026

இளைய தலைமுறையினர் மனதில் விஷத்தை கலப்பதாக உள்ளதால் இந்த வாசகத்தை நீக்கும்படி கோரினோம். ஆனால், பள்ளிக் கல்வித் துறை, பாடநூல் கழகம், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே சமூக அறிவியல் பாடத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., குறித்த இந்தப் பகுதியை நீக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரப் பட்டிருந்தது.

schoolbook1 - 2026

இந்த மனு அண்மையில் நீதிபதி ஆதிகேசவலு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பள்ளி கல்வித்துறை சார்பில் சிறப்பு பிளீடர் முனுசாமி ஆஜராகி ”வருங்காலங்களில் இதுபோன்ற வார்த்தைகள் இடம்பெறாது” என்று உறுதி கூறினார். இருப்பினும், அதை ஒரு மனுவாக தாக்கல் செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

இருப்பினும், பாடநூல் கழகத்தில் புத்தகத்தைத் தயாரிக்கும் ஆசிரியர் குழுவில், இது போன்ற மத வெறுப்பை உமிழ்பவர்களும், சமூகத்தைத் துண்டாட நினைக்கும் கிறிப்டோ கிறிஸ்துவர்களும் வந்து அமர்ந்து விடுவதும், அவர்களது எழுத்தை மீண்டும் ஒரு வல்லுநர் குழு ஆய்ந்தறிந்து, தவறுகளைக் களைய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப் பட்டு வருகிறது.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

Related articles

Recent articles

spot_img