
தமிழகத்தில் மேலும் 1438 பேருக்கு கொரோனா இன்று உறுதி செய்யப் பட்டிருக்கிறது. தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு ஆயிரத்தைக் கடந்து இதுவரை இல்லாத அளவாக உச்சம் தொட்டிருக்கிறது.
தமிழகத்தில் இன்று 1,438 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது! இன்று 6ஆவது நாளாக ஒரே நாளில் பாதிப்பு 1,000ஐ தாண்டியது.
அதே போல், சென்னையில் மட்டும் இன்று 1,116 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டிருக்கிறது. சென்னையில் இன்று 3ஆவது நாளாக கொரோனா பாதிப்பு 1,000ஐ தாண்டியது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 12 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 232ஆக உயர்ந்துள்ளது.
இன்று, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 28,000ஐ தாண்டியது! தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 1438 பேருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிற நாடுகள், மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் 33 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப் பட்டிருக்கிறது. அதே நேரம், இன்று ஒரே நாளில் 861 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளனர். இதை அடுத்து, கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை இதுவரை 15,762ஆக உயர்ந்துள்ளது.
துபாய் மற்றும் கத்தாரிலிருந்து வந்த 11 பேருக்கும், இலங்கையிலிருந்து விமானம் மூலம் வந்த ஒருவருக்கும் இன்று தொற்று உறுதி செய்யப் பட்டது.
தில்லியிலிருந்து தமிழகம் வந்த 14 பேருக்கும், மராட்டியத்திலிருந்து தமிழகம் திரும்பிய 7 பேருக்கும் தொற்று உறுதி செய்யப் பட்டது.
சென்னையை அடுத்து, சென்னையைச் சுற்றியுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் 86 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 64 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 15 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.
