சுயநலத்துக்காக பாஜகவில் இணையவில்லை; பாஜக ஆட்சியில் தான் மக்கள் நிம்மதியாக வாழ்கின்றனர். நிம்மதியான வாழ்வை வழங்கும் ஆட்சியாக பாஜகவின் ஆட்சி உள்ளதால், அதில் இணைந்துள்ளேன். சாமானியர்களுக்கான ஆட்சி நம் மோடியின் ஆட்சி… என்றெல்லாம் புகழாரம் சூட்டினார், வழக்கறிஞர் பால்கனகராஜ். இவர், இன்று பாஜக., மாநிலத் தலைவர் முருகன் முன்னிலையில், பாஜகவில் இணைந்த பின்னர் இவ்வாறு பேசியுள்ளார்.
அதே போல், இன்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன்முன்னிலையில் தமிழ்நாடு இஸ்லாமிய ஜமாத்” டாக்டர் A.முகமது ஃபெரோஸும் தன்னை பாஜக.,வில் இணைத்துக் கெண்டார். பாஜக., தேசியவாதிகளின் இருப்பிடம். தேசியவாதத்தை வலியுறுத்தும் எவர் வேண்டுமானாலும் பாஜக.,வில் இணையலாம் என்று குறிப்பிட்டார் மாநிலத் தலைவர் எல்.முருகன்!
சென்னை உயர் நீதிமன்றத்தின் பிரபல வழக்கறிஞர் ஆர்சி பால்கனகராஜ் பாஜகவில் இன்று அதிகார பூர்வமாக இணைந்துள்ளார்.. சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவரான பால்கனகராஜுக்கு வழக்கறிஞர் அணி தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் உறுப்பினராக வெற்றி பெற்றவர், பிறகு பார்கவுன்சில் தலைவர் தேர்தலில் போட்டியிட்டார். தமிழ் மாநிலக் கட்சி என்ற பெயரில் ஒரு கட்சியைத் தொடங்கி நடத்தி வந்தவர். இவர், இன்று தன் கட்சியையும் பாஜக.,வுடன் இணைத்து, தன்னையும் இணைத்துக் கொண்டார். சென்னை அமைந்தகரையில் உள்ள லட்சுமி திரையரங்கத்தில் உள்ள ஹாலில் இந்த இணைப்பு விழா நடைபெற்றது.
திமுகவில் இருந்தவர் பால்கனகராஜ். திமுகவின் பல்வேறு வழக்கு விசாரணை விவகாரங்களை நன்கு அறிந்தவர்! இவரது வருகை தமிழகத்தில் கட்சிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்று பாஜக.,வினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.