ஏப்ரல் 21, 2021, 8:13 மணி புதன்கிழமை
More

  தாயை தொடர்ந்து… ஆபத்தான நிலையில் இருந்த சிறுவனும் சிறுமியும் உயிரிழப்பு!

  மாமியார் வசந்தா, அவரது சகோதரர் ராஜேந்திரன் ஆகியோர் பிரியதர்ஷினியிடம் வீட்டை காலி செய்யுமாறு

  two-youths-died-devakottai

  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் வீட்டை காலி செய்ய சொல்லி மாமியாரும், அவரது தம்பியும் வற்புறுத்தியதால் கடந்த ஆக.4-ம் தேதி பெண் தற்கொலை செய்து கொண்டார். ஆபத்தான நிலையில் இருந்த அவரது 2 குழந்தைகள் ஒரு வாரத்திற்கு பிறகு இன்று இறந்தனர்.

  தேவகோட்டை சிதம்பரநாதபுரம் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் வசந்தா. இவரது வளர்ப்பு மகன் ராமதாஸ் (40). அவரும், அவரது மனைவி பிரியதர்ஷினி (36), மகள் பர்வதவர்த்தினி (16), மகன்கள் திருநீலகண்டன் (14), ஹரிகிருஷ்ணன் (12) ஆகியோருடன் வசந்தா வீட்டில் வசித்து வந்தனர்.

  மூன்று மாதங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் ராமதாஸ் இறந்தார். இந்நிலையில் மாமியார் வசந்தா, அவரது சகோதரர் ராஜேந்திரன் ஆகியோர் பிரியதர்ஷினியிடம் வீட்டை காலி செய்யுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்தனர்.

  இந்நிலையில் ஆக.3-ம் தேதி இரவு ராஜேந்திரன் மிரட்டி, பிரியதர்ஷினியை தாக்கியுள்ளனர். இதனால் மனமுடைந்த பிர்யதர்ஷனி ஆக.4-ம் தேதி காலை தனது மூன்று குழந்தைகளுக்கு விஷத்தை கொடுத்துவிட்டு தானும் அருந்தினார்.சம்பவ இடத்திலேயே பிர்யதர்ஷனி இறந்தார்.

  ஆபத்தான நிலையில் இருந்த மூன்று குழந்தைகளும் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து தேவகோட்டை நகர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் மகள் பர்வதவர்த்தினி, மகன் திருநீலகண்டன் ஆகியோர் இன்று சிகிச்சை பலனின்றி இறந்தனர். ஹரிகிருஷ்ணனும் தொடர்ந்து கவலைக் கிடமாக உள்ளார்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »