முதியவரின் 33 ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றி வைத்த கொரோனா!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
hyd-nurutheen
hyd-nurutheen
  • முதியவரின் பல்லாண்டு கோரிக்கையை தீர்த்து வைத்த கொரோனா வைரஸ்.
  • 33 ஆண்டுகளாக ஆசைப்பட்டது நிறைவேறியது.

முதியவர் ஒருவர் தன் கனவு நிறைவேறுவதற்கு 33 ஆண்டுகள் உழைத்து வந்தார். ஒவ்வொரு ஆண்டும் தோல்வியுற்று வந்தார். இத்தனை ஆண்டு ஆசை என்ன என்கிறீர்களா?

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவி வருவதால் மனித சமுதாயம் இக்கட்டில் சிக்கி உள்ளது. ஆனால் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு முதியவர் மட்டும் இந்த கஷ்ட காலத்தால் தான் தன் பல ஆண்டு ஆசை நிறைவேறியது என்று மகிழ்ந்து கூறுகிறார்.

வியப்பாக உள்ளதல்லவா? அவர் தன் கனவு நிறைவேற்றுவதற்கு 33 ஆண்டுகளாக உழைத்து வருகிறார். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் அதில் தோல்வியை கண்டு வந்தார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த நூறுத்தீன் என்பவர் முதல்முறையாக 1987 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினார். அப்போது ஆங்கிலத்தில் பெயிலானார். அப்போதிலிருந்து அவர் பாஸ் ஆவதற்கு முயற்சித்துக் கொண்டே வந்தார்.

ஒவ்வொரு ஆண்டும் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான 35 மதிப்பெண்களுக்கு அருகில் வந்து நின்று விடுவார். இவ்வாறு முயற்சி செய்ததில் அவருக்கு 51 வயது நிரம்பிவிட்டது. மீண்டும் தேர்வுக்கு விண்ணப்பம் செய்ய வேண்டுமென்று நினைத்தபோது அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதன்பின் ஓபன் ஸ்கூல் முறையில் விண்ணப்பம் செய்து கொண்டார். ஆனால் இதில் அனைத்து தேர்வுகளையும் எழுத வேண்டி வந்தது. இதற்கு 3 ஆயிரம் ரூபாய் பீஸ் கூட கட்டினார்.

கொரோனா வைரஸ் தொற்று நோய் தற்போது பேயாட்டம் ஆடி வருகிறது. லாக்டௌன் விதித்து விட்டார்கள். பள்ளித் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இது நூறுத்தீனுக்கு வரமாக மாறியது. ரெகுலர் தேர்வு எழுதுபவர்களுக்கு அவர்களுக்கு முன்பு நடத்திய தேர்வுகளை ஆதாரமாகக் கொண்டு பாஸ் போட்டுவிட்டார்கள். ஓபன் ஸ்கூல் முறையில் அப்ளை செய்தவர்கள் அனைவருக்குமே 35 மார்க் அளித்து பாஸ் செய்துவிட்டார்கள்.

இதனால் நூறுத்தீன் தன் பல ஆண்டு கனவு கொரோனா காரணத்தால் நிறைவேறியது என்று மகிழ்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.