ஏப்ரல் 22, 2021, 8:17 மணி வியாழக்கிழமை
More

  அம்மா கோவிட் – 19 வீட்டு பராமரிப்பு திட்டம்: தொடங்கி வைத்த முதல்வர்!

  Screenshot_2020_0814_112328

  இந்தியாவில் முதல் முறையாக வீட்டுத்தனிமையில் இருப்பவர்களுக்கு சிகிச்சையளிக்க கூடிய அம்மா கோவிட் – 19 வீட்டு பராமரிப்பு திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைத்துள்ளார்.


  மேலும் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். கொரோனா பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த எல்இடி வீடியோ வாகனங்களின் சேவைகளை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

  சென்னை மாநகராட்சி சார்பில் 15 மண்டலங்களில் 30 எல்இடி வாகனம் மூலம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்த 1 லட்சம் பேருக்கு செல்போனில் முதல்வர் குரல் பதிவில் வாழ்த்து கூறும் நிகழ்ச்சியும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

  சென்னையில் 10 லட்சம் இல்லங்களுக்கு கொரோனா, டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யும் பணியும் தொடங்கி வைக்கப்பட்டது. ரூ.33 கோடி மதிப்பீட்டில் 37 பாலங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.

  கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், அம்மா கோவிட் – 19 வீட்டு பராமரிப்பு திட்டம் நாளை முதல் செயல்பாட்டிற்கு வர உள்ளது. இதன்மூலம் வீட்டுத்தனிமையில் உள்ளவர்களை கண்காணிக்க 20பேர் கொண்ட மருத்துவ குழு சுழற்சி முறையில் பணியாற்ற உள்ளது.

  அதன்படி, 14நாட்கள் தனிமையில் இருக்கும் போது அவர்களுக்கு தேவையான முழு மருத்துவ உதவிகள் வழங்கப்படும். மேலும், 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை மதிப்புள்ள பல்ஸ் ஆக்ஸி மீட்டர், வெப்பமானி, மாத்திரைகள், 14 முகக்கவசம், கிருமி நாசினி அடங்கிய தொகுப்புகளை 2 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்தி பெற்றுக்கொள்ளும் வகையில், இதற்காக இலவச தொடர்பு எண்களும் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,232FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,121FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »