கொரோனா கட்டுப்பாட்டை மீறியவர்களிடம் அபராதம் வாங்கிய போலி பெண் போலீஸ்!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
Screenshot_2020_0814_111102

கொரோனா கட்டுப்பாடு விதி மீறல்களுக்கு அபராதம் வசூலித்து வந்த போலி பெண் காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தில்லியில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக தன்னை காட்டிக் கொண்ட ஒரு பெண், கொரோனா தடுப்பு கட்டுப்பாட்டு விதிகளை மீறியவர்களுக்கு செல்லான் கொடுத்து அபராதம் விதித்து வந்துள்ளார்.

போலீஸ் என நம்பி பலரும் அப்பெண்ணிடம் அபராதம் கட்டியுள்ளதாக தெரிகிறது. அப்போது சாலையில் இரு காவலர்கள் மப்டியில் வந்தபோது அவர்களிடமும் அபராதம் விதிக்க முயன்றுள்ளார். அப்போது செல்லானை வாங்கிப் பார்த்த காவலர்கள் அது போலியானது என தெரியவந்ததும், அப்பெண்ணை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

Screenshot_2020_0814_111043
Screenshot_2020_0814_111043

விசாரணையில் அந்தப் பெண், காவலர் இல்லை என்பதும் அவர் கொடுத்து வந்த செல்லான்கள் போலியானது என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அந்த பெண் மீது மேற்கு தில்லி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.