கள்ளக் காதலனுக்காக கணவனைக் கொலை முயற்சி!

Published:

Screenshot_2020_0814_110246

கணவனின் ஆணுறுப்பை நசுக்கியே கொல்ல பார்த்தார் காயத்ரி. இது எல்லாத்துக்கும் காரணம் காயத்ரியின் கள்ளக்காதல்தான்!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்தவர் கணேஷ். இவரது மனைவி காயத்ரி. கணேஷ் ஒரு அமெச்சூர் வீடியோகிராபராக வேலை பார்த்து வருகிறார். காயத்ரிக்கு 31 வயசாகிறது.

இந்நிலையில், போன வாரம் தம்பதி 2 பேரும் வீட்டில் கட்டிலில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். அப்போது, திடீரென காயத்ரி அலறினர். இதனால் அக்கம் பக்கத்தினர் சத்தம் கேட்டு திரண்டு ஓடிவந்தனர்.

கணேஷ் கட்டிலில் இருந்து கீழே விழுந்துவிட்டதாகவும், அதனால் தலையில் பலமாக அடிபட்டு ரத்தம் கொட்டிவிட்டதாகவும் கதறி அழுதார்

அதனால் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் கணேஷை மீட்டு ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் கணேஷூக்கு நினைவு திரும்பவேயில்லை. அதனால் 3 மணி நேரம் ஒரு ஆபரேஷன் செய்யப்பட்டது.

அதன்பிறகு ஐசியூவில் வைத்து டாக்டர்கள் தீவிரமான சிகிச்சை தர ஆரம்பித்தனர். இப்போதும் கணேஷ் ஆபத்தான நிலையில்தான் இருக்கிறார். இதுகுறித்து உறவினர்கள் வடசேரி போலீசில் புகார் செய்யவும், விசாரணை நடந்தது. காயத்ரி சொல்வதை பார்த்தால், கட்டிலில் இருந்து கீழே விழுந்தால், மண்டை எப்படி உடையும்? மண்டை ஓடு சேதமாகியிருக்கிறது.. அவர் தலையில் யாரோ பயங்கரமா அடித்திருக்கிறார்கள். கொல்ல முயன்றுள்ளனர் என்ற சந்தேகம் போலீசுக்கு வலுத்தது.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

அதுமட்டுமல்ல, கணேஷின் ஆணுறுப்பு நசுக்கப்பட்டுள்ளது, அவரது விலா எலும்பு முறிந்துள்ளது, மர்ம நபர்கள் வீடுபுகுந்து தாக்கியிருக்காங்க. அதனால் காயத்ரியை விசாரிக்க வேண்டும்” என்று உறவினர்கள் கோரிக்கை வைத்தனர். இதற்கு பிறகுதான் போலீசார் காயத்ரியிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். இவருக்கு ஒரு கள்ளக்காதலன் இருக்கிறாராம். அவர் பெயர் யாசின்

அவருடன் ஜாலியாக இருக்க கணேஷ் விடவே இல்லையாம். அதனால் கணவரை தீர்த்து கட்ட கூலி படைகளை ஏவி கொலை செய்ய முயன்றுள்ளார் காயத்ரி. இதற்காக 10 லட்சம் ரூபாயை தந்து கூலி படை ரெடி செய்துள்ளார். சம்பவத்தன்று கணேஷ் தூங்கியதும், யாசினுக்கு தகவல் கொடுத்து வரவழைத்துள்ளர்

அதன்பிறகு கூலிப்படையுடன் வந்த யாசின், கணேஷை அடித்து தாக்கி உள்ளனர். வேறு ஒரு பெண்ணுடன் உறவு இருப்பதுபோல சித்தரிக்கவே, ஆணுறுப்பையும் நசுக்கி விட்டு சென்றனராம். இதையடுத்து, விஜயகுமார், கருணாகரன், ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஆனால் கள்ளக்காதலன் எஸ்கேப் ஆகிவிட்டார். அவரை தேடி வருகிறார்கள்.

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!

Related articles

Recent articles

spot_img