பீட்ரூட் கொழுக்கட்டை
தேவையானவை:
பீட்ரூட் துருவல், அரிசி மாவு – தலா 1 கப், தேங்காய் துருவல். – கால் கப், பொடித்த வெல்லம். – முக்கால் கப், ஏலக்காய்த்தூள். – கால் டீஸ்பூன், நெய் – 4 டீஸ்பூன், முந்திரிப்பருப்பு – 10.
செய்முறை:
அரிசி மாவை வெறும் கடாயில் வறுக்கவும். கடாயில் வெல்லம், தண்ணீர் சேர்த்து சூடாக்கி, வெல்லத்தை கரையவிட்டு வடிகட்டவும். அரிசி மாவுடன் பீட்ரூட் துருவல், தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள், முந்திரிப்பருப்பு, நெய் விட்டு கலந்து… வடிகட்டிய வெல்லக் கரைசலை அதில் விட்டு, கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
கலவையில் சிறிது சிறிதாக எடுத்து உருட்டி, லேசாக தட்டி, ஆவியில் வேக வைத்து எடுக் கவும். மேலே முந்திரிப்பருப்பை வைத்து அலங்கரிக்கவும்.