சதுர்த்தி ஸ்பெஷல்: ஹெர்பல் கொழுக்கட்டை!

சமையல் புதிது சற்றுமுன் நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
Screenshot_2020_0815_160621

ஹெர்பல் கொழுக்கட்டை

தேவையானவை:

பச்சரிசி மாவு – ஒரு கப், கொத்தமல்லி இலை. – ஒரு கப், புதினா. – கால் கப், இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய். – 4, எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், தண்ணீர் – ஒன்றரை கப், எண்ணெய். – 4 டீஸ்பூன், உப்பு. – தேவையான அளவு.

செய்முறை:

கொத்தமல்லி, புதினா, இஞ்சி, பச்சை மிளகாயை சுத்தம் செய்து ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இதில் எலுமிச்சைச் சாறு விட்டு கலக்கவும். கடாயில் தண்ணீர் விட்டு உப்பு, சிறிதளவு எண்ணெய், அரைத்த விழுது ஆகியவற்றை சேர்த்து கொதிக்கவிடவும் (ஒரு கொதி போதுமானது). இதில் பச்சரிசி மாவு தூவி கட்டி இல்லாது கெட்டியாக கிளறி எடுத்து ஆறவிடவும். கையில் எண்ணெயை தடவிக் கொண்டு கலவையில் சிறிது எடுத்து, சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வைத்து ஆவியில் வேக வைத்து எடுத்தால்… ஹெர்பல் கொழுக்கட்டை தயார்.

குறிப்பு: இது, நல்ல வாசனை யாகவும் ருசியாகவும் இருக்கும். பித்தத்தை தணிக்கும். பசியைத் தூண்டக்கூடியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.