
தனக்கு திருமணம் ஆனதை மறைத்து வேறு ஒரு பெண்ணை காதல் வலைவீசி கற்பமாக்கிய இளைஞரை போலீசார் சென்னையில் கைது செய்துள்ளனர்.
சென்னை மதுரவாயலை சேர்ந்த 24 வயது பெண்ணுக்கு திடீரென வயிறுவலி ஏற்ப்பட்டுள்ளது. இதனால் அந்த பெண்ணின் பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை நடத்திய மருத்துவர்கள் பெண்ணிற்கு பிரசவவலி வந்திருப்பதாக கூறி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதில் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பெண்ணிற்கு திருமணமே ஆகவில்லை என கூறியுள்ளனர். இந்நிலையில் அந்த பெண்ணிற்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது.
இதுகுறித்து மருத்துவமனையில் இருந்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்தியதில் பல உண்மைகளை அந்த பெண் கூறியுள்ளார்.
அதன்படி புழலை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் லோகேஷ் (24) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மதுரவாயல் வழியாக சென்ற போது அந்த பெண்ணின் வீட்டின் முன்பு அவரது பைக் பஞ்சர் ஆகியுள்ளது.
அங்கு நின்று கொண்டிருந்த லோகேஷ் அந்த பெண்ணிடம் தண்ணீர் கேட்டுள்ளார். அந்த பெண்ணும் அவருக்கு தண்ணீர் கொடுக்கும் போது அந்த பெண் அழகாக இருப்பதாகவும் தன்னிடம் போனில் பேசும் படியும் ஒரு மொபைல் நம்பரை எழுதி அந்த பெண்ணிடம் கொடுத்துள்ளார். அந்த பெண் அவரை ஒருவாரமாக தொடர்பு கொள்ளவில்லை.
எனவே ஒருவாரம் கழித்து மீண்டும் அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்த லோகேஷ் ஆசை வார்த்தைகள் கூறி திருமணம் செய்து கொள்வதாக வாக்கு கொடுத்துள்ளர். அந்த பெண்ணும் அவருடன் பல இடங்களுக்கு சென்று தனிமையில் இருந்துள்ளார். இதனால் அந்த பெண் கற்பமாக அதற்கு பின் லோகேஷ் அந்த பெண்ணிடம் பேச மறுத்துள்ளார். மேலும் தனக்கு திருமணம் ஆகி விட்டது என்றும் குழந்தையை கலைத்து விடுமாறும் கூறியுள்ளார்.
அந்த பெண் தன் பெற்றோரிடம் வயிற்றில் நீர்க்கட்டி இருப்பதாக கூறி சிகிச்சை எடுத்து வந்த நிலையில் தற்போது அந்த பெண்ணிற்கு பிரசவவலி ஏற்ப்பட்டு குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த பிறகு தான் மகள் கர்பமாக இருந்ததே பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் லோகேஷை கைது செய்துள்ளனர்.