இரு சிறுவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான மனைவியைக் கொன்று தற்கொலை செய்துகொண்ட கணவன்!

Published:

murder-2-1

இரு இளைஞர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால், பித்துப்பிடித்த நிலையில் இருந்த பெண்ணை , அவரது கணவனே, அவமானம் தாங்காமல் வெட்டிக்கொன்ற சம்பவம் நெஞ்சை பதறச்செய்வதாக உள்ளது.

அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டம் பர்வாலா என்ற பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி கடந்த சுதந்திரதினத்தன்று வெளியே சென்றிருந்தார்.
அவரது மனைவி மட்டும் 7 வயது மகனுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த 16 வயதுள்ள இரு இளைஞர்கள், அவரது வீட்டுக்குள் நுழைந்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
பின்னர் இருவரும் ஓடிவிட்டனர். கணவன் வீட்டுக்கு வந்ததும், அந்த பெண் நடந்த சம்பவத்தை சொல்லி கதறியுள்ளார்.

மனைவி களங்கப்பட்டுவிட்டதாக அவமானம் அடைந்த அந்த தொழிலாளி, வீட்டுக்குள் இருந்த கூர்மையான ஆயுதத்தால், மனைவியை வெட்டிக்கொன்றுள்ளார்.
பிறகு தானும் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.

மனைவி கற்பிழந்ததே, தங்கள் இருவரின் மரணத்துக்கு காரணம் என அவர் கடிதம் எழுதி வைத்து விட்டு இந்த விபரீத முடிவை மேற்கொண்டுள்ளார்.
இது குறித்து பர்வாலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ALSO READ:  பழனி கோயில் நில விவகாரத்தில் கைதானவர் மரணம்; சந்தேகம் எழுவதாக இந்து முன்னணி குற்றச்சாட்டு!

Related articles

Recent articles

spot_img