ஏப்ரல் 21, 2021, 4:29 மணி புதன்கிழமை
More

  வசந்தகுமார் உடலுக்கு மதுரையில் அஞ்சலி!

  சொந்த ஊரான கன்னியாகுமரியின் அகஸ்தீஸ்வரத்தில் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.,

  vasanthamukar homage - 1

  மதுரை மண்டேலா நகர் பகுதியில் சொந்த ஊரான கன்னியாகுமரி செல்லும் வழியில் மறைந்த கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினரும் வசந்த் அண்ட் கோ வசந்த் தொலைக்காட்சி நிறுவனருமான அண்ணாச்சி வசந்தகுமார் உடலுக்கு காங்கிரஸார் அஞ்சலி – காங்கிரஸ் கட்சியினர் கவலை*

  நேற்று கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினரும் பன்முகத்தன்மை கொண்டவரும் வசந்த் அன்கோ வசந்த் தொலைக்காட்சி நிறுவனருமான அண்ணாச்சி உயர்திரு அமரர் வசந்தகுமார் கொரானா நோய் தொற்று காரணமாக மரணமடைந்தார்.,

  அன்னாரது பூதவுடல் இன்று பகலில் சென்னையில் உள்ள டி. நகர் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது., நாளை சொந்த ஊரான கன்னியாகுமரியின் அகஸ்தீஸ்வரத்தில் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.,

  அதற்காக அன்னாரது பூதவுடல் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சென்னையில் இருந்து திருச்சி மதுரை வழியாக கன்னியா குமரிக்கு கொண்டு செல்லப்படுகிறது., வழிநெடுகிலும் காங்கிரஸ் கட்சியினர் மிகுந்த கவலையுடன் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.,

  இந்நிலையில் மதுரை மாவட்டம் மண்டேலா நகர் சுற்றுச் சாலை சந்திப்பில் வந்து கொண்டிருந்தபோது காங்கிரஸ் கட்சி சார்பாக இளைஞர் காங்கிரஸ் முன்னாள் துணைத் தலைவர் வரதராஜன் மற்றும் வழக்கறிஞர் நீதி ராஜாராம் முத்துப்பாண்டி முத்துக்குமார் தல்லாகுளம் ரவிச்சந்திரன் பகுதித் தலைவர் சுந்தர் போஸ் சிவபாலன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கருப்பு பேட்ச் அணிந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »