seva-centre-for-formars

தமிழகத்தில் முதன்முறையாக விவசாயிக்கு சேவை மையம் பாஜக சார்பில் சோழவந்தானில் தொடங்கப் பட்டது

சோழவந்தான் எம் வி எம் மஹாலில் பாரதிய ஜனதா கட்சி விவசாயிகள் சேவை மையம் தொடங்கப்பட்டது இம் மையத்திற்கு மாநில விவசாய அணி செயலாளர் எம் வி எம் மணி என்ற முத்தையா தலைமை தாங்கினார் மாவட்ட தலைவர் மகாசுசீந்திரம் மாவட்ட பொதுச்செயலாளர் கோவிந்த மூர்த்தி விவசாய அணி மாவட்ட தலைவர் பூமி ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

ஒன்றிய தலைவர் முருகேஸ்வரி வரவேற்றார் மாநில விவசாய அணி தலைவர் ஜி கே நாகராஜ் விவசாய மையத்தை திறந்து வைத்தார் மாநில பொதுச் செயலாளர் ஸ்ரீனிவாசன் குத்து விளக்கு ஏற்றி வைத்து விவசாய சேவை மையத்தை தொடங்கி வைத்தார்

இதில் மாநில துணைத்தலைவர் மகாலட்சுமி கிசான் சங்க தேசிய செயலாளர் பெருமாள் ஜி மாநில செயற்குழு உறுப்பினர் பழனிவேல்சாமி தொழில் நுட்பப் பிரிவு மாநில செயலாளர் கிருஷ்ணகுமார் மாவட்ட விவசாய அணி செயலாளர் ஆதிசங்கர் இன்ஜினியர் ராமசாமி ஆகியோர் பேசினார்கள். ஒன்றிய துணைச் செயலாளர் செல்வி நன்றி கூறினார்

prof-srinivasan-madurai
prof-srinivasan-madurai

இதில் பேசிய மாநில பொதுச் செயலாளர் ஸ்ரீநிவாசன்… 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை முழுமையாக விவசாயத்திற்கு பயன்படுத்த மாநில அரசு மத்திய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் விவசாயிகள் சாத்தியார் அணையின் மூலம் முழுமையாக பயன் பெறவும் அணையை மேம்படுத்தி விவசாயம் செழிக்க போராடவும் தயங்க மாட்டோம்

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

நாங்கள் ஆட்சிக்கு வருவதற்காக குவாட்டர் மற்றும் கோழி பிரியாணி கொடுத்து வாக்காளர்களை பிச்சைக்காரனா மாற்றவில்லை அவர்களுக்கு நல்லது செய்து நல்லாட்சி புரிய தயாராகி வருகிறோம்

ரஜினிகாந்த் பிஜேபிக்கு வர வேண்டும் என்பது எங்களது ஆசை ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை வந்ததுபோல் அருணாசலமும் வருவார் என எதிர்பார்க்கிறோம் என்று பேசினார் இதேபோல் மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ் பேசியபோது வைகை அணையில் மண் மேவி இருப்பதை தூர்வார வேண்டும்

சாத்தியார் அணைக்கு நீர் நிரப்ப வேண்டும் விவசாயிகளை வீடு வீடாகச் சென்று மத்திய அரசின் பாரதப் பிரதமர் இந்திய விவசாய திட்டங்களை நேரடியாக சென்று கூறி வர வேண்டும் என்று பேசினார்

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending