grswaminathan in madurai thiruparankundram temple - 2026

கலக்கிய வாழ்த்து போஸ்டர்கள்; கோயிலில் வழிபட்ட நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்!

மதுரை சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
grswaminathan in madurai thiruparankundram temple - 2026

திருப்பரங்குன்றம் மலை மீது தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு நன்றி தெரிவித்து திருப்பரங்குன்றம் பகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

கடந்த ஒரு நூற்றாண்டாக முடங்கிப் போயிருக்கும் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டுமென இந்து அமைப்பினர் முருக பக்தர்கள் என பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பல ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்தக் கோரிக்கையை முன்வைத்து நடந்த சட்டப் போராட்டங்களில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி. ஆர் சுவாமிநாதன் திருப்பரங்குன்றம் மலைக்கு நேரடியாக, வந்து கள ஆய்வுகள் செய்து, குறிப்பாக தீபத் தூண் இருக்கும் பகுதியையும் ஆய்வு செய்து, அதில் தீபம் ஏற்றலாம் என உத்தரவு பிறப்பித்திருந்தார்.

கடந்த வருடம் வந்த இந்த உத்தரவை வரவேற்று திருப்பரங்குன்றம் பகுதி மக்கள் வெடி வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். எனினும் கடந்த திமுக. ஆட்சியில் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் மேல்முறையீடு செய்வதாக நாடகமாடி, தீபம் ஏற்றவிடாமல் செய்து பின்னர் நடைபெற்ற தேர்தலில் தோற்று இப்போது எதிர்க்கட்சியானது.

ALSO READ:  சதுர்த்தி விழாவில் பெண்கள், குழந்தைகள் கலந்து கொள்ளக் கூடாதா? என்ன சூழ்ச்சி இது?

தொடர்ந்து, மதுரை மாநகர காவல் ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மேல்முறையீடு செய்து தற்போது அந்த வழக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்றது. இந்த நிலையில் மீண்டும் தற்போதைய த.வெக. தலைமையிலான தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் வந்த வழக்கில், அது தீபத்தூன் அல்ல, அளவைக்கல் என்று வாதிட்டு, அதில் தீபம் ஏற்ற முடியாது என்று கூறியது. எனினும் உண்மை நிலவரம் புரிந்த உச்ச நீதிமன்றம், தீபம் ஏற்றி வழிபட இன்னும் சில தினங்களே இருப்பதால், இந்த ஒரு முறை மட்டும் நிபந்தனைகளுக்கு உடபட்டு தீபம் ஏற்றலாம் என்றும் அதன் பின்னர் வழக்கு அடுத்த கட்ட விசாரணைக்குக் கொண்டு செல்லப்படும் என்று தெரிவித்தது.

இந்த நிலையில் திருப்பரங்குன்றம் பகுதிகளில் நீதிபதி ஜி. ஆர். சாமிநாதனுக்கு நன்றி தெரிவித்து திருப்பரங்குன்றம் வழக்கறிஞர்கள் சார்பாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதில் தீபம் ஏற்றலாம் என்ற வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கிய நீதி அரசர் ஜிஆர் சுவாமிநாதனுக்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என குறிப்பிடப் பட்டுள்ளது.

ALSO READ:  மதுரை நகைக்கடை கொள்ளை; நிஷாந்த் நீதிமன்றத்தில் ஆஜர்!

திருப்பரங்குன்றம் கோவிலில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் வழிபாடு!

இந் நிலையில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நீதிபதி சுவாமிநாதன் இன்று குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். அவருடைய வருகையை முன்னிட்டு திருப்பரங்குன்றம் கோயில் பகுதி பரபரப்பாகக் காணப்பட்டது.

Posts by ரவிச்சந்திரன், மதுரை: