
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத் திருவிழா ஆறாவது நாள்: சுப்பிரமணியர் தெய்வானை தங்கமயில் வாகனத்திலும் சத்தீயகீரீஸ்வரர் பிரியாவிடை அம்மன் ரிஷப வாகனத்திலும், கோவர்த்தன அம்பிகை சின்ன ரிஷப வாகனத்தில் வீதி உலா.
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 16 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது.
இன்று ஆறாவது நாளாக சுவாமி வீதி உலா நடைபெற்றது இதில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்திலும், சத்தீயகீரீஸ்வரர் பிரியாவிடை அம்மன் ரிஷப வாகனத்திலும், கோவர்த்தன அம்பிகை ரிஷப வாகனத்திலும் திருப்பரங்குன்றம் கீழரத விதி,மேல ரதவீதி, பெரிய ரத வீதி என திருப்பரங்குன்றத்தில் உள்ள முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இதில் முன்னதாக திருப்பரங்குன்றம் 16 ஆம் கால் மண்டபம் முன்பு சைவசமய ஸ்தாபித வரலாற்று லீலை நடைபெற்றது இதனை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர். தொடர்ந்து கார்த்திகை திருவிழாவின் முக்கிய விழா வரும் 24ம் தேதி மழை மீது கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
Posts by ரவிச்சந்திரன், மதுரை:
- நகைக்கொள்ளை; மீனாட்சிக்கு தொடர்பில்லை: அடித்துச் சொல்லும் நிஷாந்த்!
- திருப்பரங்குன்றம் தீபத் திருவிழா; அன்ன வாகனத்தில் சுப்ரமண்யர் வீதி உலா!
- மதுரை கோயில்களில் கந்த சஷ்டி விழா; திருக்கல்யாண வைபவம்!
- கார்த்திகை முதல் நாள்; சபரிமலை பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடக்கம்!
- மதுரை நகைக்கடை கொள்ளை; நிஷாந்த் நீதிமன்றத்தில் ஆஜர்!


