திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை நிறுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு விரைவில் விசாரணை வர உள்ளது.
திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில்,
பணப்பட்டுவாடா செய்யப்படுவதால் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலை நிறுத்தவேண்டும் எனக் கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கை தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், திருப்பரங்குன்றம் தொகுதியில் வாக்காளர்களுக்கு அதிக அளவிலான பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. எனவே தேர்தல் நியாயமாக நடைபெற வாய்ப்பில்லை. இதனால், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலை நிறுத்திவைக்கவோ அல்லது தள்ளிவைக்கவோ நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.



