திருச்செந்தூர் முருகன் கோயில் வழக்கில், கோயிலில் சிறப்புப் பூஜைகள் என்ற பெயரில் அர்ச்சகர்கள் பக்தர்களிடம் பணம் பறிக்கக்கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏழை, பணக்காரர் என பாகுபாடின்றி ஒரே விதமாக அனைத்து பக்தர்களையும் நடத்த வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், திருச்செந்தூர் கோயிலில் பூசாரிகள், ஊழியர்கள் வருகை பதிவுக்கு பயோமெட்ரிக் கருவியை பொருத்த வேண்டும் என்றும், பணம் பெறப்படுகிறதா என்பதை கண்காணிக்க அதிகாரிகள் வாரம் ஒரு முறை ஆய்வு செய்ய உத்தரவு விட்டுள்ளது.