நாகார்ஜூனாவும் அவரது மகன் நாகசைதன்யாவும் பங்கார்ராஜு என்கிற படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.
இந்த படத்தை கல்யாண் கிருஷ்ணா குரசாலா என்பவர் இயக்குகிறார். நாகார்ஜுனாவுக்கும் ஜோடியாக பூஜா ஹெக்டேவும், நாகசைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷும் நடிக்கயிருக்கிறார்கள் எனக் கூறப்பட்டது.
படத்தின் முழு கதையையும் கேட்ட பின்னர் அதில் அவரது கதாபாத்திர வடிவமைப்பு ரொம்பவே சாதாரணமாக இருந்தது கண்டு சோர்ந்து விட்டாராம் கீர்த்தி.அதனால் அவர் இப்படத்தை மறுத்துவிட்டாராம்.
இதையடுத்து தற்போது நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடிப்பதற்கு புதிய நாயகியை தேர்வு செய்ய உள்ளார்கள். அதற்கான தேடலிலும் ஈடுப்பட்டுள்ளனர்.



