இன்று தோனிக்கு பிறந்த நாள். ஜூலை 7ம் தேதி 1981ம் தேதி பிறந்த தோனி தற்போது 38 வயது ஆன நிலையில், இந்திய அணியில் பலம் வாய்ந்த நபராக விளையாடி வருகிறார்.
அவருக்கு அணி வீரர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நேற்று இரவு தோனி தனது குடும்பத்தினருடன் பிறந்த நாளைக் கொண்டாடிய புகைப்படத்தை தோனியின் மனைவி சாக்ஷி இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தோனி தனது குழந்தை ஷிவாவுடன் குதித்து விளையாடும் வீடியோவும் அதில் பதியப் பட்டுள்ளது. இதனை பலரும் பார்த்து மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.
இதனிடையே, தோனியின் ரசிகர்கள் தோனியின் புகைப்படங்கள், பழைய போட்டிகளில் அவர் கையாண்ட விதம், ஆடிய தோரணை இவற்றை பெருமிதம் பொங்க டிவிட்டர் பதிவுகளில் பகிர்ந்து வருகின்றனர்.
View this post on Instagram
வெறித்தனம். நரம்புகளை புடைக்கச் செய்யும் வர்ணனை. ஒன்லி ஒன் தோனி… என்று தோனிக்கு புகழாரம் சூட்டும் வகையில் ஒருவர் பகிர்ந்த வீடியோ இது…
வெறித்தனம். நரம்புகளை புடைக்கச் செய்யும் வர்ணனை. ஒன்லி ஒன் தோனி.#தோனி#HBDMSDhoni pic.twitter.com/MColO0e2J9
— பட்டாசு (@pattaasu) July 6, 2019



