மலையாளத்தில் ஒரு சிறிய இடைவெளிக்குப்பின் நயன்தாரா நடித்து வரும் படம் லவ் ஆக்சன் ட்ராமா.
இந்த படத்தில் நிவின்பாலிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் நடிகராக இருந்து இயக்குனராக மாறியுள்ளார் தயன் சீனிவாசன்..
பிரபல நடிகரும் இயக்குனருமான சீனிவாசனின் இளைய மகன்தான் தயன் சீனிவாசன். இவரது அண்ணன் வினித் சீனிவாசன் பிரபல நடிகர் மற்றும் இயக்குனராக உள்ளார்.
சீனிவாசன் பல வருடங்களுக்கு முன்பே எழுதி நடித்த படமான வடக்கு நோக்கி எந்திரம் என்கிற படத்தின் தற்போதைய மாற்றமாக உருவாகியுள்ளது இப்படம் என்றுதான் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த படப்பிடிப்பு முடிந்த பின்பு சீனிவாசன் குடும்பத்தினர் நயன்தாராவை விருந்துக்கு அழைத்தனர். அதில் கலந்து கொண்ட நயன்தாரா, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.அதை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நயன்தாரா.
அதில் அவர் “ஜாம்பவான் சினிவாசன் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த இனிமையான நபர்களுடன்” என்று தனது மரியாதையையும் அன்பையும் வெளிப்படுத்தியுள்ளார்.



