கலைஞரின் மகன் அவரது வாக்கை பொய்யாக்கி உள்ளார். எஸ்வி.சேகர் ….!

அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் சென்னை தமிழகம் புகார் பெட்டி

 

SVSEKAR - 2026

சென்னைில் உள்ள மந்தைவெளி பகுதியில் பா.ஜனதா உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் எஸ்வி.சேகர் செய்தியாளா்களிடம் கூறியதாவது;

நான் தமிழக பா.ஜனதாவில் சேர்ந்தது முதல் என்னை எந்த நிகழ்ச்சிக்கும் அழைப்பதில்லை. வாஜ்பாய் அஸ்தி கரைப்பு நிகழ்ச்சிக்காக மட்டும் கூப்பிட்டார்கள்.

எதற்காக என்னை அழைப்பதில்லை என்பதெல்லாம் எனக்கு தெரியாது. எல்லா பிரச்சினைகளும் சரியாகிவிடும். தமிழக பா.ஜனதா தலைமைமாற்றப்பட வேண்டும். நிச்சயமாக மாற்றப்படும். அடுத்தமாதம் (ஆகஸ்டு) அல்லது செப்டம்பருக்குள் அது நடக்கும்.

தி.மு.க. இளைஞர் அணி தலைவராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டிருப்பது அந்த கட்சியின் உள் விவகாரம். ஏற்றுக் கொள்வது, ஏற்றுக் கொள்ளாதது என்பதெல்லாம் தி.மு.க.வினரின் முடிவு.

ஆனால் வாரிசு அரசியல் செய்ய தி.மு.க. ஒன்றும் சங்கரமடம் அல்ல என்று கலைஞர் தெரிவித்து இருந்தார். அதை மு.க.ஸ்டாலின் பொய்யாக்கி இருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.