
இரண்டு முறை முயன்று மூன்றாவது முறை தற்கொலை செய்து கொண்டவர் சாவு
மதுரை, டிச.10: இரண்டு முறை முயன்று மூன்றாவது முறை தற்கொலை செய்து கொண்டவர்கள் மரணம் அடைந்தனர்.
மதுரை அரசரடி வெள்ளை கண்ணு தியேட்டர் ரோடு பகுதியை சேர்ந்தவர் சூசை ஆரோக்கிய ஜார்ஜ் 29 இவருக்கு வலிப்பு நோய் இருந்து வந்தது இதனால் ஏற்கனவே இரண்டு முறை தற்கொலை செய்ய முயன்று தப்பித்துவிட்டார் மூன்றாவது முறையாக நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் இவரது சாவுகுறித்து எஸ் எஸ் காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை சின்னக்கடை வீதியில் 475 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது! போலீசார் அதிரடி!
மதுரை, டிச.10: மதுரை சின்னக்கடை வீதியில் பதுக்கி வைத்திருந்த 475 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர்.
மதுரை சின்னக் கடை வீதி எழுத்தாணிக்கார தெருவில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக தெற்குவாசல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . போலீசார் அந்தப் பகுதியை கண்காணித்து சோதனை நடத்திய போது எழுத்தாணிக்கார தெருவில் 475 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவற்றை பதுக்கி வைத்திருந்த அசோக்குமார் ஜெயின் 50 முத்துப்பாண்டி (53) சாய்ராம் (57) ஆகிய மூவரையும் கைது செய்து செய்தனர்.
மதுரை டிவிஎஸ் நகரில் தொலைபேசியில் நண்பர் போல் பேசி ரூ.1 லட்சத்து நாற்பதாயிரம் மோசடி! போலீசார் விசாரணை!
மதுரை.டிச.10: டிவிஎஸ் நகரில் நண்பரைப் போல் தொலைபேசியில் பேசி ஒரு லட்சத்தி நாற்பதினாயிரம் ரூபாய் மோசடி செய்த மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை டிவிஎஸ் நகர் துரைசாமி ரோட்டை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (76) . சம்பவத்தன்று இவருக்கு தொலைபேசி ஒன்று வந்தது .அதில் அவருடைய நண்பரைப் போல் பேசி நம்ப வைத்து ரூபாய் ஒரு லட்சத்தி நாற்பதினாயிரம் வங்கி மூலம் வாங்கி ஏமாற்றி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ராமகிருஷ்ணன் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவுசெயது மோசடி ஆசாமியைதேடி வருகின்றனர்.
மதுரை அழகப்பன் நகரில் கத்தி முனையில் வழிப்பறி!
மதுரை, டிச.10: மதுரை அழகப்பன் நகரில் கத்தி முனையில் வழிப்பறி செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் தினேஷ்குமார் 21 .இவர்அழகப்ப நகர் பாலாஜி தெரு சந்திப்பில் நடந்து சென்ற போது அவரை வழிமறித்த விளாச்சேரியை சேர்ந்த சையத் இஸ்மாயில் என்ற சதம் என்ற ஓட்டையன் 22 என்பவர் கத்தி முனையில் வழிமறித்து தினேஷ்குமார் வைத்திருந்த பணத்தை பறித்துச் சென்றுவிட்டார் இந்த சம்பவம் தொடர்பாக தினேஷ்குமார் சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்ததில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சையத் இஸ்மாயில் கைது செய்தனர்.