
திருநெல்வேலி, தென்காசி, மதுரை, ராமேஸ்வரம், கொல்லம் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் சேவை அக்டோபர் முதல் வாரத்தில் துவங்க இருக்கிறது. அதன் விவரம் …
1) வண்டி எண் 02632 திருநெல்வேலி – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் திருநெல்வேலியிலிருந்து அக்டோபர் 2ஆம் தேதி முதல் இரவு 07.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 06.35 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 02631 சென்னை எழும்பூர் – திருநெல்வேலி சிறப்பு ரயில் அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் சென்னை எழும்பூரில் இருந்து இரவு 7.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6 45 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 5 குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 11 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், மூன்று இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள் இணைக்கப்படும். இந்த சிறப்பு ரயில்கள் நெல்லை எக்ஸ்பிரஸ் நின்று சென்ற நிறுத்தங்களில் நின்று செல்லும்.
2) வண்டி எண் 02661 சென்னை எழும்பூர் – செங்கோட்டை சிறப்பு ரயில் அக்டோபர் 3 ஆம் தேதி முதல் சென்னை எழும்பூரில் இருந்து இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு செங்கோட்டை வந்து சேரும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 02662 செங்கோட்டை – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் செங்கோட்டையிலிருந்து அக்டோபர் 4ஆம் தேதி முதல் மாலை 06.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 06.00 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும். இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 5 குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 11 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், மூன்று இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள் இணைக்கப்படும். இந்த சிறப்பு ரயில்கள் பொதிகை எக்ஸ்பிரஸ் நின்று சென்ற நிறுத்தங்களில் நின்று செல்லும்.
3) வண்டி எண் 02613 சென்னை எழும்பூர் – மதுரை தேஜாஸ் சிறப்பு ரயில் அக்டோபர் 2 ஆம் தேதி முதல் சென்னை எழும்பூரில் இருந்து காலை 6.00 மணிக்கு புறப்பட்டு நண்பகல் 12.20 மணிக்கு மதுரை வந்து சேரும்.
மறுமார்க்கத்தில் வண்டி எண் 02614 மதுரை- சென்னை எழும்பூர் தேஜாஸ் சிறப்பு ரயில் மதுரையிலிருந்து அக்டோபர் 2 ஆம் தேதி முதல்
மாலை 03.15 மணிக்கு புறப்பட்டு இரவு 09.30 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும். இந்த ரயில்கள் வியாழக்கிழமைகளில் இயங்காது. இந்த ரயில்கள் திருச்சி, கொடைக்கானல் ரோடு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
4) வண்டி எண் 02206 ராமேஸ்வரம் – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் ராமேஸ்வரத்திலிருந்து அக்டோபர் 2ஆம் தேதி முதல் இரவு 08.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.15 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 02205 சென்னை எழும்பூர் – ராமேஸ்வரம் சிறப்பு ரயில் அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் சென்னை எழும்பூரில் இருந்து மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.25 மணிக்கு ராமேஸ்வரம் வந்து சேரும்.
இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன முதல்வகுப்பு பெட்டி, ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 3 குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 11 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள் இணைக்கப்படும். இந்த சிறப்பு ரயில்கள் மாம்பலம், தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, காரைக்குடி, தேவகொட்டை ரோடு, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம் ஆகிய ரயில் நிலையங்களில்நின்று செல்லும். வண்டி எண் 02205 சென்னை ராமேஸ்வரம் சிறப்பு ரயில் அரியலூர், ஸ்ரீரங்கம் ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.
5) வண்டி எண் 06723 சென்னை எழும்பூர் – கொல்லம் சிறப்பு ரயில் அக்டோபர் 3 ஆம் தேதி முதல் சென்னை எழும்பூரில் இருந்து இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 1.15 மணிக்கு கொல்லம் சென்று சேரும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 06724 கொல்லம் – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் கொல்லத்திலிருந்து அக்டோபர் 4 ஆம் தேதி முதல் மாலை 03.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 08.10 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும். இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன முதல்வகுப்பு பெட்டி, ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 3 குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 11 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள் இணைக்கப்படும். இந்த சிறப்பு ரயில்கள் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் நின்று சென்ற நிறுத்தங்களில்நின்று செல்லும்.
பயணச்சீட்டுகள் முன்பதிவு செய்தால் மட்டுமே இந்த ரயில்களில் பயணிக்க முடியும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு வியாழக்கிழமை (01.10.2020) காலை 8 மணி முதல் துவங்குகிறது.
மத்திய உள்துறை அமைச்சகம் வழிகாட்டியுள்ள அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் பின்பற்றப்படும். அனைத்து பயணிகளுக்கும் உடல் வெப்ப சோதனை மேற்கொள்ளப்படும். கொரோனா தொற்று அறிகுறிகள் இல்லாத பணிகள் மட்டும் ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
உறுதி செய்யப்பட்ட முன்பதிவு பயணச்சீட்டுகள் வைத்துள்ள பயணிகள் மட்டுமே ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவர். பயணிகள் அனைவரும் பயணத்தின்போதும், ரயில் நிலையத்தில் இருக்கும் போதும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
பயணிகள் உரிய சோதனைகளுக்காக ரயில் புறப்படுவதற்கு 90 நிமிடங்களுக்கு முன்பாக ரயில் நிலையத்திற்கு வருகை தர வேண்டப் படுகிறார்கள். அனைத்து பயணிகளும் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
குளிர்சாதன வசதி பெட்டிகளில் படுக்கை விரிப்புகள், தலகாணி, கம்பளி போர்வை ஆகியவை வழங்கப்பட மாட்டாது. பயணிகள் தங்களது சொந்த படுக்கை விரிப்புகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.