பிப்ரவரி 25, 2021, 1:09 மணி வியாழக்கிழமை
More

  பெண் குழந்தைக்கு தந்தையானார் விராட் கோலி!

  Home சற்றுமுன் பெண் குழந்தைக்கு தந்தையானார் விராட் கோலி!

  பெண் குழந்தைக்கு தந்தையானார் விராட் கோலி!

  virat anushka
  virat anushka

  இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது.

  இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, கடந்த 2017ம் ஆண்டு நடிகை அனுஷ்கா சர்மாவை, காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

  இதையடுத்து, கடந்த ஆண்டு தந்தையாகி விட்டதாக அவரது டுவிட்டர் பக்கத்தில், மனைவியுடன் இருக்கும் புகைப்படத்துடன் செய்தியை வெளியிட்டு, அதில், ‘2021ம் ஆண்டு ஜனவரியில் 3 பேர் வருகிறோம் எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்காக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் பங்கேற்று விட்டு, மனைவியின் பிரசவத்திற்காக நாடு திரும்பினார் கோலி.

  இந்த நிலையில், மருத்துவமனையில் இன்று பிரசவத்திற்காக அனுஷ்கா சர்மா அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது.

  Support Us

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari