ஏப்ரல் 10, 2021, 5:33 மணி சனிக்கிழமை
More

  பெற்றோர்களே எச்சரிக்கை! குழந்தைங்க கைல இத கொடுக்காதீங்க..!

  bresh 1 - 2

  தற்போது உள்ள கால கட்டத்தில் குழந்தைகளை பழக்குவதாக கூறி சிறு வயதிலேயே கையில் பிரஷை கொடுத்து பல் துலக்க செய்கின்றனர் ஆனால் அதில் இருக்கும் பிரச்சனைகளை குறித்து மருத்துவர் எச்சரித்துள்ளார்.

  மியன்மாரைச் சேர்ந்த சி நார் பாவ் என்ற பணிப்பெண், முதலாளியின் பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ள அமர்த்தப்பட்டிருந்தார். இந்நிலையில், சம்பவம் நடந்த அன்று 2 வயது குழந்தையைகுளிப்பாட்டுவதோடு, அவனுடைய பற்களைத் துலக்கவேண்டியிருந்தது.

  ஆனால் அவர் குழந்தையின் பற்களை துலக்காமல் குழந்தையின் கையில் 15 செண்டிமீட்டர் நீளம் கொண்ட பிரஷை கொடுத்துள்ளார். குழந்தையின் வாய்க்குள் பிரஷ் இருந்த நிலையில், அந்த பெண் அவன் மீது கவனம் செலுத்தாமல் இருந்த போது அந்த குழந்தை பல்துலக்கியை லாலிபாப் மிட்டாய் என்று நினைத்து அதை விழுங்க முயற்சி செய்துள்ளான் அப்போது எதிர்பாராத விதமாக அது குழந்தையின் தொண்டையில் சிக்கிக்கொண்டது.

  அப்போது குழந்தை கத்தி அழத் தொடங்கியதும் அந்த பெண் திரும்பிப் பார்த்த போது அந்த குழந்தை ரத்தமாக வாந்தி எடுப்பதையும் அவனின் வாய்க்கு வெளியே பிரஷின் பிடி நீட்டிக்கொண்டிருந்ததையும் கவனித்து அதிர்ச்சியடைந்தனர்.

  இந்நிலையில், இது குறித்த தகவல் குழந்தையின் தாயாருக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர் உடனடியாக அவசர மருத்துவ உதவி வாகனத்தை அழைத்து மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்து சென்றார்.

  மருத்துவமனையில் குழந்தையின் தொண்டையில் சிக்கி கொண்டிருந்த பிரஷை அகற்றப்பட்டது ஆனால் அவனின் தொண்டையில் காயங்கள் ஏற்பட்டதால் சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்த பின் வீடு திரும்பினான். அந்த பணிபெண்ணின் கவனக்குறைவால் காயம் ஏற்படுத்தியதற்கு, அந்த பெண்ணிற்கு 6 மாதங்கள் வரையிலான சிறைத்தண்டனையோ, 2,500 வெள்ளி வரையிலான் அபராதமோ, இரண்டுமோ விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்க படுகிறது.

  இந்நிலையில், குழந்தைகளுக்கு விவரம் தெரியும் வரை பெற்றோர்கள் தான் கவனமுடன் இருந்து அனைத்தையும் செய்ய வேண்டும் அல்லது அவர்களின் கண்காணிப்பில் வைத்து குழந்தையை பழக்க வேண்டும் மாறாக இப்படி கையில் பிரஷை கொடுத்து குழந்தையை செய்ய சொன்னால் அசம்பாவிதம் நடக்க வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளனர்.

  அதே சமயம் கொடுக்கும் பேஸ்ட்டில் ஃப்ளுரைட் இருப்பதால் அதை முழுங்காமல் கவனமாக இருக்க வேண்டும் அது அதிக அளவு சென்று விட்டால் வயிற்று கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  2 × 1 =

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,222FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,104FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »