வாக்காளர் அடையாள அட்டைகள் அபேஸ்..! திருட்டு திமுக., நபர் மீது புகார்!

Published:

voter id cards

வாக்காளர் அடையாள அட்டைகளை நேரடியாக தபால் நிலையத்தில் இருந்தே அபேஸ் பண்ணிய திருட்டு திமுக.. நபர் குறித்து தபால் அலுவலகத்தில் அதிகாரியிடம் புகார் தெரிவித்துள்ளார் வழக்குரைஞர் ஒருவர்.

தபால் துறை அலுவலர்கள்/ அதிகாரிகள் தவிர்த்து தனிப்பட்ட நபர்கள் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்றுக்கொண்டு முறைகேட்டில் ஈடுபடுவது தொடர்பாக ஒரு புகார் மனுவை அளித்திருக்கிறார் சென்னை சானடோரியத்தைச் சேர்ந்த சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் கீதா பாஸ்கர்!

இதுதொடர்பாக சென்னை தாம்பரம் தலைமை தபால் நிலைய அதிகாரிக்கு அளித்துள்ள புகார் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது…

postal id card theft by dmk - 2026

தங்களது கவனத்துக்கு ஒரு முறைகேட்டை கொண்டு வர விரும்புகிறேன் … சென்னை சானடோரியம் சித்தி விநாயகர் கோவில் தெருவில் வசிக்கும் செல்லப்பா என்பவரின் மகன் சுரேஷ், திமுக முன்னாள் கவுன்சிலர்.

இவர் தேர்தல் ஆணையத்தால் உள்ளூர் தபால் அலுவலகம் மூலம் அனுப்பப் பட்டுள்ள வண்ணப் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகளை முறைகேடாகப் பெற்று, அதிக அளவில் தன் கையில் வைத்திருக்கிறார். புதிய அடையாள அட்டைகளை வாங்கிச் சென்று சிலருக்கு அவர் விநியோகித்ததாகத் தெரிகிறது.

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

தனது கட்சியான திமுக.,வின் தேர்தல் அரசியல் ஆதாயத்திற்காக தபால் அலுவலகத்திலிருந்து புதிய வாக்காளர் வண்ண அடையாள அட்டைகளைத் தானே கையெழுத்திட்டு பெற்றுக்கொண்டு சுமார் 10 பேருக்கு அவர் விநியோகித்து உள்ளதாகவும் மீதம் உள்ள 40 க்கும் மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகளை தாமே வைத்துக் கொண்டுள்ளதாகவும், அடையாள அட்டை தங்கள் கையில் கிடைக்கப் பெறாதவர்கள் புகார் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது!

இதையடுத்து பலர் தபால் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தங்களுக்கு அட்டை கிடைக்கப் பெறாததைத் தெரிவித்துள்ளனர்! இந்நிலையில் வாக்காளர் அடையாள அட்டை பெறப்பட்ட அந்தப் பத்து பேரில் ஒருவர் அதிமுக.,வைச் சேர்ந்தவர் என்பதால் அவர் தனக்கு அட்டை கிடைத்த விதத்தை அறிந்து கொண்டு மேற்படி விஷயத்தை வெளியில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து திமுக முன்னாள் கவுன்சிலர் எதற்காக மற்றவர்களுடைய வாக்காளர் அடையாள அட்டைகளை தபால் அலுவலகத்திலிருந்து தாமே முறைகேடாக பெற்று வைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து தபால் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார் வழக்குரைஞர் கீதா பாஸ்கர்.

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

இந்த விவகாரம் குரோம்பேட்டை சிட்லபாக்கம் பகுதிகளில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது ஏற்கனவே வாக்காளர் பட்டியல் மூலம் முறைகேடுகளில் ஈடுபட்டு வந்த திமுகவினர் தற்போது அடையாள அட்டைகளில் கை வைத்திருப்பது ஏதோ தேர்தல் தில்லு முல்லு நடக்கப் போவதை மட்டும் வெளிப்படுத்தியுள்ளது என்கின்றனர் அப்பகுதியினர்.

Related articles

Recent articles

spot_img