ஏப்ரல் 22, 2021, 8:39 காலை வியாழக்கிழமை
More

  குடிசை வீட்டில் வாழும் மிகவும் ஏழ்மையான பாஜக பெண் வேட்பாளர்!

  santhana powri - 1

  மூன்று மாடு, மூன்று ஆடு, ஒரு குடிசை வீடு, சுத்தமான தண்ணியும் இல்ல, கழிப்பறையும் இல்ல. பேங்க் அக்கௌண்ட்ல ரூ. 31, 984 பணம்’ இது தான் சந்தனா பௌரி பற்றிய அறிமுகம்.

  30 வயதான சந்தனா பௌரி பாஜக வேட்பாளராக சல்தோரா சட்டமன்ற தொகுதியில் போட்டியிட உள்ளார். இதுவரை வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்களில் மிகவும் ஏழையான வேட்பாளராக இவர் அறியப்பட்டுள்ளார்.

  அவருடைய கணவர் ஷ்ரபன் கொத்தனாராக பணி புரிகின்றார். நாள் ஒன்றுக்கு அவருக்கு ரூ. 400 சம்பளம் வழங்கப்படுகிறது. மழை காலங்களில் வேலையாட்கள் கிடைக்காத காரணத்தால் கணவருக்கு துணையாக சந்தனாவும் பணிக்கு செல்வது வழக்கம்.

  இருவரும் நூறு நாள் வேலை திட்டத்திற்கான அட்டைகளை வைத்துள்ளனர். அவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

  கழிப்பறைக்கு நாங்கள் அருகில் இருக்கும் வயல்வெளிக்கு தான் செல்ல வேண்டும். மிகவும் சமீபத்தில் தான் வீட்டியேலே கழிப்பறை வேண்டும் என்று நாங்கள் ஆசைப்பட்டோம். கடந்த ஆண்டு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் திட்டத்தின் கீழ் ரூ. 60 ஆயிரம் எங்களுக்கு கிடைத்தது. தற்போது இரண்டு அறைகளைக் கட்டி உள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார் சந்தனா.

  30 வயதாகும் சந்தனா மூத்த பாஜக உறுப்பினராவார். அவருக்கு இந்த எம்.எல்.ஏ. வாய்ப்பு மிகப்பெரியதாக பார்க்கப்படுகிறது. கெலாய் கிராமத்தில் இருந்து காலையில் தாமரை பொறிக்கப்பட்ட காவி நிற புடவையை உடுத்தி பிரச்சாரத்திற்கு செல்கிறார். அடிக்கடி திரிணாமுல் ஊழல் மிக்க கட்சி என்று கூறிக் கொண்டு செல்லும் அவர், அப்பகுதியில் எந்தவிதமான மேம்பாடுகளையும் அக்கட்சி செய்யவில்லை என்றும் குற்றம் சுமத்தினார்.

  மோடி மேம்பாட்டு திட்டத்திற்கு கொடுத்த பணத்தை எல்லாம் திரிணாமுல் கட்சி ஊழல் செய்துள்ளது என்று அவர் தன்னுடைய பிரச்சாரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

  தனித்தொகுதியாக அறிவிக்கப்பட்டிருக்கும் சல்தோராவில் இரண்டு முறை திரிணாமுல் காங்கிரஸ் ஸவப்பன் பரூயை வேட்பாளராக களம் இறக்கி வெற்றியும் பெற்றது. இம்முறை சந்தோஷ் குமார் மண்டலை வேட்பாளராக களம் இறக்கியுள்ளது திரிணாமுல்.

  உள்ளூர் ஆட்கள் மூலமாகவும், உள்ளூர் செய்தி சேனல்கள் மூலமாகவும் தான் என்னுடைய பெயர் தாக்கல் செய்யப்பட்டது என்று தெரிய வந்தது என்கிறார் சந்தனா. என்னை வேட்பாளராக தேர்வு செய்ததன் மூலம், கட்சிக்கு நிதி நிலை ஒரு பொருட்டு இல்லை என்பது தெளிவாக்கியுள்ளது.

  ஸ்ரபன் இதற்கு முன்னர் அரசியலில் ஈடுபட்டார். ஒரு ஃபார்வர்ட் பிளாக் ஆதரவாளர், அவர் 2011-ல் ஆட்சிக்கு வந்த பின்னர் திரிணாமுல் தொண்டர்கள் அவரை தொந்தரவு செய்தனர். இது குடும்பத்தை பாஜகவில் சேர வழி வகுத்தது.

  2016 ஆம் ஆண்டில் உத்தர கங்காஜல்காட்டி மொண்டோலின் மஹிலா மோர்ச்சாவின் பொதுச் செயலாளராக பதவியேற்ற சந்தானா, பின்னர் பங்கூரா மாவட்டத்தின் பொதுச் செயலாளர்களில் ஒருவராக இருந்தார். ஸ்ரபன் 8ம் வகுப்பு வரை படித்துள்ளார். சந்தனா இடைநிலைக் கல்வி கற்றுள்ளார்.

  ‘முன்னதாக, நான் காலை 6 மணிக்கு எழுந்திருப்பேன், சமைப்பேன், குடிநீரைப் பெற்று வீட்டு வேலைகளைச் செய்வேன். மாலை நேரங்களில், நான் என் குழந்தைகளுக்கு படிக்க உதவினேன். இந்த பரபரப்பான கால அட்டவணை இருந்தபோதிலும், கட்சி வேலைக்கு நேரம் கிடைத்தது. இப்போது, என் மாமியார் குழந்தைகளை கவனித்து வருகிறார். என்னுடைய புதிய பாத்திரத்தால் பொறுப்புகளை மாற்றி அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றார் சந்தனா.

  புதிய அரசு பதவி ஏற்றால் வீட்டுக்கு அருகிலேயே வேலை கிடைக்கும் என்று ஸ்ரபன் கூறுகிறார். சில நேரங்களில் ஹவ்ரா, கொல்கத்தா மற்றும் அஸ்ஸாம் என்று பல்வேறு மாவட்டங்களில் வேலை பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

  குடிசை வீட்டிற்கு முன்பே இருக்கும் நாற்காலிகளை காட்டி, இதில் நான்கு மட்டும் தான் எங்களுக்கு சொந்தமானது. மற்ற அனைத்தும் ஊர்க்காரர்கள் கொண்டு வந்து வைத்தது என்று கூறினார் சந்தனாவின் மாமனார் சுனில்.

  தற்போது உருவாக்கப்பட்டிருக்கும் அறையில் அலுமினிய பெட்டி, மேசை, ஃபேன், படுக்கை விரிப்பு, பள்ளி புத்தகங்கள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளது. சந்தனா தன்னுடைய பிள்ளைகள் சிறப்பான முறையில் பள்ளி படிப்பை முடிக்க வேண்டும் என்பதை விரும்புகிறார். எனக்கு படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் என்னுடைய அப்பா பரீட்சைக்கு ஒரு மாதத்திற்கு முன்பே இறந்துவிட்டார். 11ம் வகுப்பு படிக்கும் போது மணம் செய்து கொண்டேன். 12ம் வகுப்பு படிக்கும் போது கர்ப்பம் அடைந்ததால் பள்ளியில் இருந்து நிற்கும் நிலை ஏற்பட்டது என்றார்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,121FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »