நீண்ட காலமாய் திருமணம் ஆகவில்லை.. 13 வயது சிறுவனை மணந்த ட்யூசன் ஆசிரியை!

marriage 4 - 2026

தன்னிடம் டியூஷன் பயின்ற 13 வயது மாணவர் ஒருவரை திருமண தோஷம் கழிப்பதற்காக ஆசிரியை திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டியூஷனுக்காக சென்ற 13 வயது மாணவர் வீடு திரும்பிய நிலையில் தனக்கு நடந்த திருமண சடங்குகள் குறித்து பெற்றோரிடம் தெரிவித்ததால் உடனடியாக ஆசிரியை மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதன் பின்னர் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரின் பஸ்தி பவா கேல் பகுதியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் நீண்ட காலமாக திருமணம் ஆகாமல் இருந்து வந்தார். அவருக்கு ஜாதகத்தில் திருமண தோஷம் இருப்பதாகவும் மைனர் சிறுவன் ஒருவனை அடையாள திருமணம் செய்தால் தோஷம் கழிந்துவிடும் எனவும் ஆசிரியையின் பெற்றோரிடம் ஆலோசனை தெரிவித்துள்ளார் ஒரு நபர்.

இதனையடுத்து ஆசிரியையிடம் டியூஷன் பயின்று வந்த 13 வயது மாணவர் ஒருவரை அந்த ஆசிரியை திருமணத்திற்காக தேர்ந்தெடுத்துள்ளார். மாணவரின் பெற்றோரிடம் பேசிய ஆசிரியை மாணவருக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்க வேண்டியிருப்பதால் ஒருவாரம் அவரது வீட்டிலேயே தங்க வேண்டும் என கோரியிருக்கிறார். இதனை ஏற்ற பெற்றோரும் மாணவரை தங்குவதற்கு அனுமதித்துள்ளனர்.

சட்டவிரோதமாக தங்கவைக்கப்பட்ட சிறுவனை கட்டாயப்படுத்தி ஆசிரியையும், அவரின் பெற்றோர்களும் திருமண சடங்குகள் செய்ததாகவும். இந்த திருமணத்தின் போது மெகந்தி வைபவம், முதலிரவு என அனைத்து சம்பிரதாயங்களும் கடைபிடிக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் வளையல்களை உடைத்து திருமண பந்தம் முறிந்ததாகவும், திருமண முறிவு சம்பிரதாயங்கள் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

இதனிடையே ஆசிரியையின் வீட்டில் இருந்து மீண்டும் தனது வீட்டிற்கு சென்ற மாணவர் நடந்தவை குறித்து தனது பெற்றோர்களிடம் கூறியுள்ளார். இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த மாணவரின் பெற்றோர் பஸ்தி பவா கேல் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இருப்பினும் காவல்நிலைய புகார் குறித்து அறிந்த ஆசிரியையின் குடுப்பத்தினர், மாணவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னர் மாணவரின் பெற்றோர் கொடுத்த புகாரை திரும்பப் பெற்றதாகவும் தெரியவந்துள்ளது.

பஸ்தி பவா கேல் காவல்நிலைய அதிகாரி ககன் தீப் சிங் கேகோன் இந்த விவகாரம் குறித்து பேசுகையில், மாணவருடன் ஆசிரியை திருமணம் செய்தது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது,

இருப்பினும் மாணவரின் பெற்றோர் புகாரை வாபஸ் பெற்று சென்றுவிட்டதாகவும் அவர் கூறினார், இருப்பினும் மூத்த காவல்துறை அதிகாரிகள் இந்த விவகாரத்தை மிகவும் சீரியசாக எடுத்துக்கொண்டு விசாரணை நடத்த உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

இதுவரை ஆசிரியை மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories