ஏப்ரல் 20, 2021, 4:09 மணி செவ்வாய்க்கிழமை
More

  முதலில் நாம் சரியா எனப் பார்த்து பேசவும்: ஆ ராசாவின் பேச்சிற்கு ஓபிஸ் கண்டனம்!

  ops panneerselvam
  ops panneerselvam

  நல்ல உறவில் ஆரோக்கியமான உறவில் சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தை தலைவர் ஸ்டாலின் என்றால், கள்ள உறவில் பிறந்த குறைப்பிரசவம்தான் எடப்பாடி பழனிச்சாமி என்று திமுக எம்.பி. ஆ.ராசா பேசியதற்கு, துணை முதல்வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனங்களை தெரிவித்திருக்கிறார்.

  ”மாண்புமிகு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை நாகரிகமற்ற முறையில் தரக்குறைவாக பேசிய ஆ.ராசாவுக்கு அஇஅதிமுக சார்பில் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்தும் கொள்கிறேன். பதவி வெறியில் அவரது உளறல் மூலம் எந்த அளவிற்கு அவரும் திமுகவும் தரம் தாழ்ந்துள்ளனர் என்பதை தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்

  தரக்குறைவான சொற்களால் வசைபாடுவதால் பேசப்படுபவர் ஒருபோதும் குறைந்து போவதாய் அர்த்தமல்ல. மாறாக அது பேசுபவருடைய அறிவீனத்தையே பிரதிபலிக்கும்.

  மக்களின் பிரதிநிதியாக தம்மை முன்னிறுத்திக் கொள்பவர் சபை நாகரிகத்துடனும், அரசியல் மாண்புடனும் நடந்து கொள்ள வேண்டும். தனது சுய வாழ்வில் முதலில் தாம் சரியாக இருக்கிறோமா என்பதை நினைவில் நிறுத்திக் கொண்டு பேசவேண்டும்.

  இனியேனும் இப்படி தரமற்ற முறையில் பேசுவதை ஆ.ராசா நிறுத்திக்கொள்ள வேண்டும் என அவரை கடுமையாக எச்சரிக்கிறேன்”எனும் ஓபிஎஸ் வரிகளில் ஆவேசம் தெறிக்கிறது.

  மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை நாகரிகமற்ற முறையில் விமர்சித்து பேசிய திரு.ஆ.ராசாவிற்கு கடும் கண்டனங்கள்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,118FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »