December 5, 2025, 12:22 PM
26.9 C
Chennai

இந்த அறிகுறி எலும்பு தேய்மானமா? என்ன செய்யலாம்?

Bone - 2025

எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் சத்துக்கள் இன்றியமையாதது. இந்த சத்துக்கள் குறைவதால் எலும்புகள் தேய்மானம் ஏற்படுகிறது.

எலும்பு தேய்மானம் ஏற்பட்டால் முழங்கால், இடுப்பு, கழுத்து, தோள், மணிக்கட்டு, முதுகில் திடீரென வலி ஏற்படும்.

எனவே எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி எலும்பு தேய்மானம் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

எலும்பு தேய்மானம் ஏற்பட காரணம்
உடல் இயக்கமற்ற நிலையில் இருந்தால் ரத்த செல்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டு எலும்புகளில் தாதுப் பற்றாக்குறை ஏற்படும். இதுதான் எலும்பு தேய்வதற்கும், வலி ஏற்படுவதற்கும் முக்கிய காரணம்.

உணவு, உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறை மாற்றத்தால் தான் எலும்பு தேய்வு பிரச்னைக்கு முக்கிய காரணமாக உள்ளது.

எலும்புகளின் அடிக்கட்டமைப்பை வலுவாக வைத்திருப்பவை புரதங்களே. எலும்புக்கு வலு சேர்க்க்கும் கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்களை அதிகமாக உணவில் சேர்த்து கொள்ளமால் இருந்தால் உலும்பு தேய்மானம் ஏற்படும்.

எடை அதிகம் இருத்தல், மதுப்பழக்கம், புகைபிடித்தல், மெனோபாஸ், பெண்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் கருப்பை அகற்றுதல் போன்ற காரணங்களால் ஏற்படும் எலும்பு தேய்மானம் ஏற்படும்.

ஒருவருக்கு எலும்பு தேய்மானம் இருந்தால் இடுப்பு, தோள், மணிக்கட்டு, முட்டி, முதுகு, கழுத்து உள்ளிட்டவற்றில் திடீரென வலி ஏற்படும்.

அடி முதுகு வலி, முதுகெலும்பு வளைதல், எடை குறைதல், அழுத்தத்தினால் எலும்புமுறிவு ஏற்படுதல் போன்றவை பொதுவான அறிகுறிகள் ஆகும்.

மேலும் சில நேரம் இரவில் சரியான தூக்கமின்மை மற்றும் கால், கை, விரல்கல் மரத்துப்போதல் போன்ற உணர்வு இருக்கும்.

எலும்பு தேய்மானம் அடைவதை தடுக்க செய்ய வேண்டியவை

தினமும் உடற்பயற்சி செய்வதின் மூலம் எலும்புகள் தன்மை மற்றும் அதன் உறுதியை பாதுகாக்க முடியும்.

நடை பயற்சி செய்வதை முறையாக செய்வது நல்லது, அதாவது சரியான காலணிகள் அணிவதால் முழங்காலில் ஏற்படும் வலி வாதம் இவற்றை தவிர்க்கலாம். எனவே தினமும் குறைந்தது ஒரு மணி நேரம் நடை பயற்சி செய்ய வேண்டும்

மிகவும் வயது முதிர்ந்தவர்கள் குறைந்தது இரண்டு மணிநேரத்திற்கு ஒரு முறை படுக்கையில் இருந்து எழுந்து நிற்க செய்யுங்கள்.

பால் இரவில் அதிகம் எடுப்பதை விட மாலை அல்லது காலை வேளைகளில் எடுத்து கொள்வதால் தூக்கம் தடைபடுவதை தவிர்க்கலாம்.

கால்சியம் அதிகம் உள்ள உணவுகளான பால், கீரை, தானியங்கள் போன்றவற்றில் தினமும் உணவில் சேர்ப்பது மிக முக்கியம். இது எலும்புகளை வலுப்படுத்த உதவும்.

பச்சை காய்கறிகளில் கால்சியம் அதிகமாக உள்ளதால் காய்கறிகளை விரும்பி உண்ணுங்கள். சோயா தானியத்தில் மிக அதிகம் கால்சியம் உள்ளதால் இதை உணவில் சேர்த்துக்கொள்ள பழகுங்கள்.

காபி அதிகம் பருகுவதை தவிர்ப்பது நல்லது. இது உடலில் இருந்து கால்சியம் வெளியேறுவதை அதிகப்படுத்தும்.
புகைபிடிப்பது, மது அருந்துவது உடலில் உள்ள கால்சியம் அளவை குறைக்க வாய்ப்புள்ளதால் இதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

எலும்புகளுக்கு தேவையான வைட்டமின் டி சூரிய ஒளியினால் தோல் மூலம் உறிஞ்சப்படும். எனவே குறைந்தது பதினைந்து நிமிடமாவது சூரிய ஒளி உடலில் படுவது அவசியம்.

உளுத்தம் பருப்பு, கொள்ளு, ராகி, முருங்கை காய் மற்றும் முருங்கை கீரை, வாழைப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு மற்றும் கீரை வகைகளில் கால்சியம் சத்து அதிகமாக நிறைந்துள்ளது. இவை அனைத்து எலும்பும் வலுவடைய உதவும் மற்றும் எலும்பு தேய்மானத்தை கட்டுப்படுத்தும்.

பெண்களுக்கு மெனோபாஸ் 40 வயதுகளில் வருவதால் அதன் பின்னர் கால்சியம் பற்றாக்குறைக்கு ஆளாகின்றனர். அந்த நேரத்தில் கால்சியம் அதிகம் உள்ள சிக்கன், மட்டன், இறால், முட்டை, மீன் போன்ற உணவு வகைகளை சேர்க்க வேண்டும்.

மெனோபாசுக்குப் பின்னர் சோயா பீன்ஸ் சேர்த்துக் கொள்வதன் மூலம் அதிக கால்சியம் உடலுக்குக் கிடைக்கும். அத்திக்காயை வேகவைத்து சிறு பருப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் கை, கால் வலி குணமாகும்.

அவுரி இலை, வாதநாராயணன் இலை, பூண்டு, மிளகு அனைத்தையும் எடுத்து அரைத்து தினமும் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் மூட்டு வாதம், மூட்டு வீக்கம் குணமாகும்.

அமுக்காரா, சுக்கு, ஏலக்காய், சித்தரத்தை தலா 100 கிராம் எடுத்து அரைத்து தினமும் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் கை, கால் வலி, மூட்டு, இடுப்பு மற்றும் தொடை வலி குணமாகும்.

வாரத்தில் மூன்று முறை 15 நிமிடங்களாவது வெயிலில் இருக்க வேண்டும். எலும்புகள் உறுதியிழப்பைத் தடுக்க தினமும் 20 நிமிடம்வாக்கிங் செல்ல வேண்டியது கட்டாயம். உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

நீங்கள் உண்ணும் உணவில் அதிக அளவு உப்பு எடுத்து கொண்டால், உங்கள் உடலில் உள்ள கால்சியம் சத்து குறைந்து விடும். இதனால், உங்கள் எலும்புகளுக்கு பலம் கிடைக்காது.

ரொட்டி, சீஸ், சிப்ஸ் போன்ற உணவுகளில் அதிக அளவு உப்பு சேர்க்கப்பட்டு உள்ளது.

இதற்காக உப்பை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பது இல்லை, ஆனால் ஒரு நாளைக்கு 2,300 மில்லிகிராம் அளவிற்கு குறைவாக சோடியம் (உப்பு) நமது உணவில் சேர்த்து கொண்டால் போதுமானது.

சாப்ட் ட்ரிங்க்ஸ் (soft drinks ) எனப்படும் கோலா வகை பானங்களை எடுத்து கொள்ளும் போது உங்கள் எலும்புகள் பலவீன படும்.

நீங்கள் குடிக்கும் ஆல்கஹாலின் அளவைக் கட்டுப்படுத்தவேண்டும். நாம் நமது உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என்று நினைத்தால் முதலில் மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் அதனை கைவிட வேண்டும்.

வெந்தயத்தை பொடி செய்து முட்டையின் வெள்ளைக் கருவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் எலும்பு தேய்மானத்தால் ஏற்படும் இடுப்பு வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.

ஆல மர மொட்டுகளை பொடி செய்து சாப்பிட்டால் இடுப்பு, எலும்பு வலியை தடுக்கலாம்.

ஆளிவிதை 100 கிராம் எடுத்து பொடி செய்து, இத்துடன் குங்கிலி பஸ்பம் 10 கிராம் சேர்த்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

எலும்பு தேய்மானத்தால் ஏற்படும் மூட்டு வலிக்கு அவுரி இலையை விளக்கெண்ணெய் சேர்த்து வதக்கி ஒத்தடம் கொடுக்கலாம்.

அமுக்காரா, சுக்கு, ஏலக்காய், சித்தரத்தை தலா 100 கிராம் எடுத்து அரைத்து தினமும் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் கை, கால் வலி, மூட்டு, இடுப்பு மற்றும் தொடை வலி குணமாகும்.

அத்திக்காயை வேக வைத்து சிறு பருப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் கை, கால் வலி குணமாகும்.

அத்தி மரத்தில் இருந்து பால் எடுத்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி, இடுப்பு வலி, தண்டுவடக் கோளாறு குணமாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories