
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகரில் உள்ள கைலாசநாதர் கோவில் தெருவில் வசித்து வருபவர் 50 வயது தன்ராஜ். இவர் உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கச் சென்றுள்ளார்.
அப்போது அந்த ஏடிஎம் மையத்தில் அறிமுகமில்லாத ஒரு டிப்டாப் பெண்மணி நின்றுகொண்டிருந்தார். அவரிடம் தனது ஏடிஎம் கார்டை கொடுத்து பத்தாயிரம் பணம் எடுத்துத் தருமாறு கூறியுள்ளார்.
உடனே அந்தப் பெண் இவரது பின் நம்பரை மட்டும் கேட்டு தெரிந்துகொண்டு, ‘ஏடிஎம்மில் கார்டை சொருகி பார்த்தேன். ஏடிஎம்மில் பணம் இல்லை’ என்று பொய் கூறியுள்ளார்.
பின்னர் அவர் கொடுத்த ஏடிஎம் கார்டுக்குப் பதில் போலியான கார்டை தன்ராஜிடம் கொடுத்துவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் மாயமாகிவிட்டார் அந்த டிப்டாப் பெண்மணி.