கண் முன்னே இறந்த அண்ணன்! உடனே மயங்கி உயிரிழந்த தம்பி!

சற்றுமுன் தமிழகம்
brothers
brothers

உடல்நலக்குறைவால் கண்முன்னே அண்ணன் உயிரிழந்ததைப் பார்த்த அதிர்ச்சியில் தம்பியும் உயிரிழந்த சோகம் அரங்கேறி இருக்கிறது.

மயிலாடுதுறை அருகே முடிகண்டநல்லூரைச் சேர்ந்த 71 வயதான வீரமணியும் 64 வயதான குணசேகரனும் உடன் பிறந்த சகோதரர்கள்.

நேற்று வீரமணிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, அவரை காரில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றுள்ளார் குணசேகரன். காரில் ஏறிய சில நிமிடங்களில் வீரமணி உயிரிழந்துள்ளார்.

அதனைப் பார்த்த அதிர்ச்சியில் அடுத்த சில நொடிகளில் தம்பி குணசேகரனும் உயிரிழந்துள்ளார். சிறுவயதில் இருந்தே அண்ணன் வீரமணி மீது அதீத அன்பும் மரியாதையும் கொண்டிருந்தவர் குணசேகரன் என்று கிராமத்தினர் கூறுகின்றனர்.

ஒரே நேரத்தில் அண்ணன் தம்பியும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.