August 2, 2021, 4:11 am
More

  ARTICLE - SECTIONS

  கொலை மிரட்டல் விடும் திமுக.,வினர்! கதறும் நடிகை!

  aadhira pandilakshmi
  aadhira pandilakshmi

  திமுக இளைஞரணியினர் தன்னையும் தனது மகனையும் வீட்டில் நுழைந்து மிரட்டுவதாகவும், கொன்றுவிடுவேன் என்று மிரட்டுகிறார்கள் என்றும் நடிகை ஆதிரா பாண்டிலட்சுமி பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

  இங்கே பாருங்க என்று வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டு, இது தொடர்பாக அவர் முதல்வர் ஸ்டாலினிடம் நியாயம் கேட்டிருக்கிறார்.

  ஒரு குப்பை கதை, அப்பா, மருது உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஆதிரா பாண்டியலட்சுமி.. சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் இவருடைய வீட்டின் அருகே திமுக பிரமுகர்கள் என்று சொல்லிக் கொண்டு சிலர் தகராறு செய்துள்ளதாகத் தெரிகிறது.

  இது குறித்து ஆதிரா கடந்த 7ஆம் தேதி போலீசில் புகார் அளித்திருக்கிறார். ஆனால் அதற்குப் பிறகும், அந்த நபர்கள் இவர் வீட்டின் அருகில் பிரச்னை செய்தனராம். இதை அடுத்து, ஆதிரா தன் ட்விட்டர் பக்கத்தில், “சந்தேகத்திற்கிடமான சிலர் எதிர் வீட்டில் சுவர் ஏறுவதை தட்டிக்கேட்ட என்னையும், மகனையும் அப்பகுதி திமுக இளைஞர் அணியினருடன் சேர்ந்து சுற்றி வளைத்து தாக்கி, வீட்டில் நுழைந்து என் மகனை அடித்துக் கொலை மிரட்டல் விட்டார்கள். பெண்களுக்கு பாதுகாப்பு அரசு கொடுக்குமா? என்று கேள்வி எழுப்பினார்.

  இன்னொரு ட்வீட்டில், “என் சொந்த வீட்டிலிருந்து எங்களை விரட்ட தொடர்ச்சியாக ஈடுபடுகிறார்கள். திமுக.,வின் நல்லாட்சிக்கு களங்கம் விளைவிக்க கட்சிப் பெயரை தவறாக பயன்படுத்தி பல தவறுகளை செய்கிறார்கள். அதில் ஒன்றுதான் இது” என்று பதிவிட்டார். அந்த பதிவுடன், ஏற்கெனவே தான் போலீசில் தந்த புகாரின் நகலையும் பதிவு செய்தார்.

  இன்னொரு ட்வீட்டில், “நம்மாழ்வார் அக்குப்பஞ்சர் சிகிச்சை மையத்துக்கு வந்த கர்ப்பிணி பெண்ணை “இங்கு வந்தால் கொன்று விடுவேன்!” என்று மிரட்டி அங்கிருந்த பைக்குகளை அவர் மீது தள்ளும் மதுரவாயல் தொகுதி வளசரவாக்கம் திமுக இளைஞர் அணி நபர்கள். அரசின் நடவடிக்கை தேவை” என்று பதிவிட்டார். இந்தப் பதிவுடன், அந்த நபர்கள் மிரட்டுவது தொடர்பான வீடியோவையும் பகிர்ந்திருந்தார்.

  ஆதிராவின் இந்த ட்வீட்டுகளில் முதல்வர் ஸ்டாலின், எம்.எல்.ஏ., உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் ட்விட்டர் பெயர்களையும் குறிப்பிட்டிருக்கிறார். இப்போது இந்த ட்வீட்கள் டிவிட்டரில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.

  மேலும் வேறொரு ட்வீட்டில், “லாக் டவுனில் மளிகை கடை திறந்து வைத்து வியாபாரம் பார்த்த நபரின் கடையை ஸ்குவாடு வந்து மூடினார்கள். வீட்டின் மாடியிலிருந்து வேடிக்கை பார்த்த என்னை ஆபாசமாக திட்டத் தொடங்கினார். அதை வீடியோ எடுத்தேன். ஆபாசமாக செய்கையுடன் மிரட்டினார். இதை பாருங்கள் @mkstalin @Udhaystalin @KanimozhiDMK” என்று குறிப்பிட்டு எம்பி கனிமொழியையும் அதில் டேக் செய்துள்ளார்.

  திமுக.,வினரின் மிரட்டல்கள் என்று குறிப்பிட்டு, இப்படி கொலை மிரட்டல் ஆடியோக்களும், வீடியோக்களும் இணையத்தில் அதிகம் வலம் வருவதால் மக்கள் தங்கள் கருத்து சுதந்திரம் முதல் உயிருக்கு ஆபத்து என்பது வரை அச்சத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,252FansLike
  0FollowersFollow
  28FollowersFollow
  74FollowersFollow
  1,336FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-