Pornography
Pornography

உத்தரப்பிரதேச மாநிலம் எட்டா மாவட்டத்தில் பாக்வாலா காவல் நிலைய பகுதியில் வசிக்கும் ஒரு 16 வயதான பெண் அதே பகுதியில் வசிக்கும் 20 வயதான கல்லன் என்ற இளைஞரை காதலித்து வந்தார்.

இந்நிலையில் அந்த காதலியை அந்த இளைஞர் பலமுறை உறவு வைத்து அனுபவித்துள்ளார். மேலும் அந்த காட்சியை அந்த பெண்ணுக்கு தெரியாமல் வீடியோ எடுத்து வைத்துள்ளார்.

இந்நிலையில் அவர்களுக்குள் திடீரென சண்டை வந்துள்ளது. அதனால் அந்த காதலன் அந்த பெண்ணோடு இருக்கும் அந்த அந்தரங்க வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விட்டார்.

பின்னர் அந்த படம் அந்த பகுதியில் வைரலானது. அந்த படத்தை பார்த்த அந்த பெண்ணின் சகோதரர் இது பற்றி அந்த பெண்ணிடமும் தன்னுடைய குடும்பதினரிடமும் கேட்டு சண்டை போட்டுள்ளார்.

இதனால் மனமுடைந்த அந்த பெண் கடந்த திங்கள் கிழமையன்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் அந்த பெண்ணின் குடும்பத்தினர் அந்த பெண்ணை ஏமாற்றி இப்படி அவரின் அந்தரங்க படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு அவரின் தற்கொலைக்கு காரணமான அந்த இளைஞர் மீது போலீசில் புகார் கூறினார்கள்.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

போலிசார் வழக்கு பதிவு செய்து அந்த இளைஞரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending