கொரோனா: பிரபல நடிகையின் மகன் உயிரிழப்பு! கணவர் சீரியஸ்!

Published:

kavitha
kavitha

நந்தினி’, ‘என்றென்றும் புன்னகை’ சீரியல்களில் நடித்தவருபவர் நடிகை கவிதா.

தமிழ், தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்திருக்கும் சீனியர் நடிகையான கவிதா தன் மகன் சாய் ரூப்பை கொரொனா தொற்றுக்குப் பறி கொடுத்துள்ளார்.

தமிழில் கதாநாயகி முதல் அம்மா வேடம் வரை 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் கவிதா. ‘ஆட்டுக்கார அலமேலு’, ‘நாடோடித் தென்றல்’, ‘அமராவதி’ ஆகியவை இவர் நடித்த படங்களில் குறிப்பிடத்தக்கவை. ஐதராபாத்தைச் சேர்ந்த இவர் தெலுங்குத் திரையுலகில் அதிகம் அறியப்பட்டவர்.

தமிழ், தெலுங்கு சினிமாவில் வெற்றிகரமாக வலம் வந்தவர் பிறகு சீரியல் பக்கம் வந்தார். தற்போது ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் ‘என்றென்றும் புன்னகை’ தொடரில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.
இன்னொருபுறம் ஆந்திர அரசியலிலும் ஆர்வம் காட்டி வந்தார்.

கடந்தாண்டு கொரோனா முதல் அலை தொடங்கிய போதே ஷூட்டிங், அரசியல் பணிகளுக்குத் தற்காலிகமாக பிரேக் கொடுத்து விட்டு குடும்பத்துடன் வீட்டிலேயே இருந்து வந்தார் கவிதா.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

இந்நிலையில் தற்போது கொரோனா இரண்டாவது அலையில் இவரது கணவர் தசரத ராஜ் மற்றும் மகன் சாய் ரூப் இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

kavitha 1
kavitha 1

இதில் இவரது மகனின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்து வந்தது. கடைசியில் நேற்று அவர் மரணமடைந்து விட்டார். கவிதாவின் கணவர் தசரத ராஜ் தற்போதும் சிகிச்சையில்தான் இருக்கிறார்.

தெலுங்குத் திரையுலகைச் சேர்ந்த பலரும் நடிகை கவிதாவுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img