December 2, 2021, 6:02 pm
More

  அணில் மேட்டர்ல 10 ஆயிரம் கோடி ஆட்டயப் போடும் ‘விடியல்’ திட்டம்… அண்ணாமலையால் ‘பணால்’!

  2024ஆம் ஆண்டுக்குள் ஆயிரம் கோடி ரூபாயை ஆட்டையை போடலாம் என நினைத்தவர்கள் இப்போது அரண்டு போய் கிடக்கிறார்கள்

  stalin senthil balaji annamalai
  stalin senthil balaji annamalai

  பஞ்சாப்பில் பிறந்த தமிழக IAS அதிகாரி ஏன் மத்திய பெண் மந்திரியைப் பார்த்து மின்சார அணில் மந்திரியின் சில ரகசிய File களை போட்டோ எடுத்து தருகிறார்? விடியலுக்கு இனி தீராத தலைவலிதான். 2024க்கு போட்ட 10000 கோடி. Target கானல்நீர் தானோ? – என்று பாஜக.,வின் எஸ்.ஆர். சேகர் தனது டிவிட்டர் பதிவில் ஒரு அரசல் புரசல் அரசியலை வெளிப்படுத்தியிருந்தார்.. இந்தப் பின்னணியில் உள்ள விவகாரம், சமூகத் தளங்களில் பெரிதாக விவாதிக்கப் பட்டது.

  முன்னதாக, இதே தொடர்பிலான ஒரு தகவலை அக்.18 அன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பாஜக தலைவர் அண்ணாமலை வெளிப்படுத்தியிருந்தார். இந்த பத்திரிகையாளர் சந்திப்பும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

  இதனிடையே இன்று சமூக தளங்களில் வேறு ஒரு தகவலும் வைரலானது அதில், நேற்று ‘எச்சரிக்கை’ இன்று நீக்கம்? சாதித்த அண்ணாமலை… “மலை அண்ணாமலை” சொன்னது நடந்தது ! என்று குறிப்பிட்டு தமிழகத்தில் மின்சாரத் துறையில் நடைபெற இருந்த மாபெரும் ஊழல் முன்னதாகவே தடுக்கப்பட்டு விட்டது என்று குறிப்பிடப்பட்டது

  மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அங்கம் வகித்த திமுக வின் ஆ ராசா எப்படி 2ஜி ஊழலை விஞ்ஞான முறையில் செய்தாரோ அதைப்போல மின்சாரத் துறையில் தமிழகத்தில் மாபெரும் ஊழலை திமுக அரசு முன்னெடுத்தது என்றும் அது அண்ணாமலையால் தடுக்கப்பட்டுள்ளது என்றும் சமூக தளங்களில் கருத்துகள் பகிரப்பட்டன.

  அவ்வாறு வெளியான ஒரு வைரல் தகவல்… தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் நேற்றைய செய்தியாளர் சந்திப்பு சமூக வலைத்தளங்களில் கடும் வைரலாக பரவி வருகிறது, நேற்றைய ஊடகங்களின் ‘பிரைம் டைம்’ என கூறும் விவாத நேரத்தையும் அண்ணாமலையின் பத்திரிகையாளர் சந்திப்பு மாற்றம் செய்தது என்பதே நேற்றைய கள நிலவரம்.

  அண்ணாமலையின் நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் பத்திரிகையாளர் ஒருவர் கோபாலபுரத்தில் பிறந்தவர்கள் குறித்து அண்ணாமலை எழுப்பிய கேள்விக்கு கோவப்பட்டதும் அதற்கு அண்ணாமலை கொடுத்த பதிலடி ஆகியவை மட்டுமே விவாத பொருளாக மாறிய நிலையில் சத்தமில்லாமல் மிக பெரிய மாற்றம் நேற்று இரவோடு இரவாக அரங்கேறியுள்ளது.

  தமிழகத்தை சேர்ந்த மின்சாரதுறை தனியார் சிக் நிறுவனத்திடம் ஒரு யூனிட் மின்சாரம் 20 ரூபாய்க்கு வாங்க முடிவு செய்துள்ளது எனவும், அந்த நிறுவனத்தை ஆளும் கட்சியை ஒருவர் வாங்கி அந்த நிறுவனத்திற்கு மின்சார துறையில் இருந்து டெண்டர் கொடுக்கப்பட்டு மிக பெரிய ஊழல் நடக்க இருப்பதாகவும் உடனடியாக இந்த ஊழலை தடுக்கவில்லை என்றால் அனைத்து ஆதாரங்களும் ஒவ்வொன்றாக வெளியிடப்படும் என தெரிவித்தார்.

  மேலும் இது ட்ரைலர் தான் இனி தான் ஆட்டம் இருக்கு ஒரு குடும்பத்தினர் அழுத்தம் கொடுக்கிறார்கள் என அதிகாரிகள் கையெழுத்து போட்டு சிக்கி கொள்ள வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்தார்,

  இந்தச் சூழலில் அண்ணாமலையின் நேற்றைய சந்திப்பு அரசாங்கத்தின் உயிர் நாடியாக இருக்கக் கூடிய தலைமைச் செயலக முக்கிய நபர்களை அதிர்ச்சியடைய செய்ய விஷயம் உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை செல்போனில் அழைத்து உச்சபட்ச அரசு பொறுப்பில் இருக்க கூடியவர் பேசும் நிலைக்கு சென்றுள்ளது.

  இதில் மின்வாரிய அதிகாரிகளும் தகவல் உண்மைதான் என தெளிவுபடுத்த, கோட்டை வட்டாரமே ஆட்டம் கண்டு போயுள்ளதாம்…

  திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 6 மாதம் முடிவடைவதற்குள் ஊழல் என்ற தகவல் வெளிவந்தால் ஆட்சிக்கே அவப்பெயரை உண்டாக்கும்… மேலும் இப்போது லஞ்ச ஒழிப்புத்துறைக்கு வழக்கு பதிவு செய்ய அறிவுறுத்தும் அதிகாரம் ஆளுநருக்கு இருக்கிறது என்பதால் எப்படி வேண்டுமானாலும் நிலைமை மாறலாம் என்பதால், கொடுத்த டெண்டரை கைவிட முடிவு செய்யப்பட்டுள்ளதாம்!

  மேலும் அதிகாரிகள் பலர் இந்த விவகாரத்தில் மௌனம் காத்து வருவதால் லம்பாக பணத்தை சுருட்டலாம் என நினைத்தவருக்கு அண்ணாமலையின் நேற்றைய செய்தியாளர் சந்திப்பு கடும் பின்விளைவுகளை உண்டாக்கியுள்ளது…. என்று குறிப்பிட்டு தமிழகத்தில் நடக்கவிருக்கும் ஒவ்வொரு ஊழலும் இனி கண்காணிப்பின் கீழ் இருக்கும் என்றும், 2024ஆம் ஆண்டுக்குள் 10 ஆயிரம் கோடி ரூபாயை ஆட்டையை போடலாம் என நினைத்தவர்கள் இப்போது அரண்டு போய் கிடக்கிறார்கள் என்றும் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,107FansLike
  370FollowersFollow
  47FollowersFollow
  74FollowersFollow
  1,773FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-