கன்னியாகுமரி மாவட்டத்தில் சாமித்தோப்பில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயா வைகுண்டர் ஆலயத்தில் ஐயா அவதார தின விழா நாளை வெள்ளி க்கிழமை நடைபெறுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஐயா வைகுண்டர் அவதார தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவர் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர். மேலும் தாழ்த்தப்பட்ட மக்களின் மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுத்து தாழக்கிடப்பாரை ‘தற்காப்பதுவே தர்மம்‘ என்று கூறி அனைத்து சாதி மக்களையும் ஒன்றிணைத்தார். ஐயா வைகுண்டர்ரை பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகள் ஒருங்கிணைந்த அவதாரமாக நினைத்து மக்கள் வழிபடுகின்றனர். ஆண்டுதோறும் மாசி 20ம் தேதி அய்யா வைகுண்டரின் அவதார தினம் கொட்டப்பட்டு வருகிறது.
அதே போல இந்த ஆண்டு மார்ச் 4ம் தேதி வைகுண்டரின் 190 வது அவதார தினம் கொண்டாடப்பட உள்ளது. இவரின் அவதார தினத்தில் தலைமை பதி அமைந்துள்ள சாமித்தோப்பில் திருவிழா நடைபெறும். இந்த விழாவில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து மக்கள் பங்கேற்பர். வெவ்வேறு ஊர்களில் இருந்தும் மக்கள் பாதயாத்திரையாக சாமி தோப்புக்கு வந்து தரிசனம் செய்து செல்வார்கள்.
