
வேலூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கட்டுக்கட்டாக கள்ள நோட்டுகள் கொட்டப்பட்டுக் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ஃபோட்டோ காப்பி (Xerox) செய்த 500 ரூபாய் நோட்டுகள் 14.30 லட்சம் மதிப்பில் சாலையில் கொட்டப்பட்டிருந்தது.
இதனை சாலையில் கொண்டு வந்து கொட்டிச் சென்ற நபர் யார் என்று தெரியவில்லை. சாலையில் பொருத்தப்பட் டுள்ள கண்காணிப்புக் கேமிராவை அலசிப் பார்த்தப் பின்பு தெரிய வரும் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சாலையில் பறந்த நோட்டுகளை எடுத்தவர்களிடம் இருந்து ரூபாய் நோட்டுக்களை போலீஸார் திரும்பப் பெற்றுள்ளனர். தவறி யாராவது கை வசம் இவற்றை வைத்திருந்தால் அதை பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.