
விருதுநகர் தொகுதி முன்னாள் பாராளுமன்ற
உறுப்பினர் டி.இராதாகிருஷ்ணன் இன்று மரணமடைந்தார்.
விருதுநகர் மக்களவை தொகுதியின் முன்னாள் உறுப்பினர் டி.ராதாகிருஷ்ணன் மாரடைப்பு காரணமாக இறந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது.
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் கட்ந்த 2014இல் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் டி.இராதாகிருஷ்ணன். அதிமுகவில் மாவட்ட செயலாளராக 2000-2003 வரை பொறுப்பு வகித்தவர். மேலும், சிவகாசி ஒன்றிய சேர்மனாக 1986 மற்றும் 2011-2014 வரை பதவி வகித்தவர். இவருக்கு பாக்கியலட்சுமி, தனலட்சுமி என்ற இரு மனைவிகளும், 3 மகள்கள் மற்றும் 1 மகன் உள்ளனர்.