பிரதமர் நரேந்திர மோடி இன்று 27-ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்கு மன் கி பாத் (மனதின் குரல்) என்ற தலைப்பில் நாட்டு மக்களுக்கு அகில இந்திய வானொலி மூலம் 4-வது முறையாக உரையாற்ற உள்ளார். இதில் பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இணைந்து உரையாற்ற உள்ளார். இந்நிகழ்ச்சி நாடெங்கும் உள்ள அகில இந்திய வானொலியின் அனைத்து அலைவரிசைகளிலும் ஒலிபரப்பாகும். பாரதப் பிரதமர், அமெரிக்க அதிபர் ஆகியோர் பங்கேற்ற நிகழ்ச்சியின் தமிழாக்கத்தை 28-ம் தேதி புதன்கிழமை காலை 9 மணிக்கு சென்னை வானொலி நிலையம் ஒலிபரப்பும்.
நரேந்திர மோடி- ஒபாமா இன்று இரவு வானொலியில் உரை
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari