திருச்சி குமார வயலூரிலுள்ள அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் பிப்ரவரி 3-ம் தேதி தைப்பூசத் திருவிழா தொடங்குகிறது. தைப்பூச தினமான பிப்ரவரி 3-ம் தேதி காலை 5 மணிக்கு திருக்கோயில் நடை திறக்கப்பட்டு அர்ச்சனைகள் நடைபெறும். பிற்பகல் 12 மணிக்கு அபிஷேக ஆராதனைகளுக்குப் பிறகு முத்துக்குமாரசுவாமி புறப்பாடாகி உய்யக்கொண்டான் ஆற்றில் தீர்த்தவாரி கண்டருளி, அதவத்தூர் மண்டபத்தில் காட்சி தருதல் நடைபெறும். இரவு 8 மணிக்கு புறப்பாடாகும் முத்துக்குமாரசுவாமி வரகாந்திடலை அடைந்து மண்டகப்படி பெற்று, தைப்பூச மண்டபத்திற்கு நள்ளிரவு 12 மணிக்கு வந்தடைவார்.
திருச்சி வயலூர் முருகன் கோயிலில் பிப்.3 -ல் தைப்பூசத் திருவிழா தொடக்கம்
Popular Categories


